tamilnadu

தருமபுரி முக்கிய செய்திகள்

அரூர் சந்தைக்கு இடம் ஒதுக்க வலியுறுத்தல்

தருமபுரி, டிச.3- அரூர் வாரச்சந்தைக்கு புதியதாக இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென  வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் கடைவீதி எப்போதும் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. பேருந்துகள், லாரி உள்ளிட்ட வாக னங்கள் கடைவீதி வழியாக, பேருந்து நிலை யத்திற்கு வருவதால் தினந்தோறும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில், திங்கட்கிழமைகளில், அரூரில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு காய்கறிகள், வெங்காய கடைகள், மளிகை பொருட்கள், ஜவுளி, கயிறு, இரும்பு சாமான்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய் யப்பட்டு வருகிறது. இதனால் வாரந் தோறும் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வாரச்சந்தைக்கென சந்தைமேட்டில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடம் குறைவாக இருப்பதுடன், குறுகலாக இருப்பதால் அங்கு சரிவர கடைகள் போடு வதில்லை. இதனால் சாலையோரத்தில் கடைகள் போட ஆரம்பித்து, தற்போது சந்தைமேட்டில் இருந்து கடைவீதி வரை வாரச்சந்தை கடைகள் போடப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அளவிற்கு கூட்டமாக காணப்படுகிறது.சந்தைமேட்டில் அரசு நிலம் இருக்கிறது. அந்த பகுதியில் கூட கடைகள் போட அனுமதி அளித்தால், சாலையோரத்தில் கடைகள் போடுவது குறை யும். எனவே, சந்தைக்கு புதியதாக இடமோ இல்லையெனில் இருக்கிற இடத்தில் விரி வாக்கம் செய்து தர வேண்டுமென வியாபா ரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தார்ச்சாலை அமைக்க மக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, டிச.3- பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளிப் பட்டியில் இருந்து கனகாபுரம் செல்லும் வழி யில்மண் சாலையை  தார்ச்சாலையாக மாற்றி அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சிந்தல் பாடி பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக் கள் அரூர், கடத்தூர் பகுதிகளுக்கு செல்லுவ தற்கு பள்ளிப்பட்டி - கனகாபுரம் 2கி.மீ சாலையை பிரதானமாக பயன்படுத்தி வருகி ன்றனர். இது மண் சாலையாக உள்ளது. இந்நிலையில் சிலநாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்  மற்றும் அதிகா ரிகளிடம் மக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றி அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.