திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

சிறுமி பாலியல் பலாத்காரம்- பள்ளி மாணவர்கள் மூவர் கைது

கோவை, ஜூன் 22- கோவை, சுந்தராபுரத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்  செய்த மூன்று பள்ளி மாணவர்களை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். கோவை மாவட்டம், சுந்தராபுரம்  பகுதியில் தாயை இழந்த 11 வயது சிறுமி தந்தை மற்றும் அத்தையின் அரவ ணைப்பில் ஒரு வாடகை வீட்டில் வளர்ந்து வருகிறார்.

தந்தை யும், அத்தையும் கூலி வேலைக்குச் செல்லும் நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் சிறுமி, கீழ் வீட்டில் டி.வி பார்க் கச் செல்வது வழக்கம்.  கீழ் வீட்டில் இருக்கும் 10ஆம் வகுப்புப் படிக்கும் மாணவனின் பெற்றோரும் வேலைக் குச் செல்லும் நிலையில், சிறுவன் மட்டும் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பிற்காக சிறு வனின் பெற்றோர் அவருக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதில், ஆபாசப் படங்களை அப்பள்ளி மாணவன் பார்த்து வந்துள்ளார்.

மேலும், 11 ஆம் வகுப்புப் படிக்கும் இன்னொரு மாணவனையும் வீட்டிற்கு வரவ ழைத்து இருவரும் ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே 20 ஆம்  தேதியன்று டி.வி. பார்க்க வந்த சிறுமியை கட்டாயப்படுத்தி ஆபாசக் காட்சிகளைப் பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்ந்து வந்த நிலையில் மேலும் ஒரு  11ஆம் வகுப்பு படிக்கும்  சிறுவனையும் அழைத்து, மூவரும் சேர்ந்து சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய் துள்ளனர். இந்நிலையில், அந்த சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவம னைக்கு தந்தையும், அத்தையும் அழைத்துச் சென்றனர்.

அவ ரைப் பரிசோதித்தபோது சிறுமி தொடர்ந்து  பாலியல் துன்பு றுத்தல் உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இதனைய டுத்து மருத்துவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த னர். இத்தகவலறிந்த கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த மூன்று மாணவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த மேலும், ஒரு சிறுவன் திங்களன்று பிடிபட்டான்.

;