ஈரோடு, மே 21-இலங்கை முள்ளிவாய்க்காலில் நடந்தபோரில் இறந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஈரோடு பெரியார் மன்றத்தில் திங்களன்று நடைபெற்றது.இலங்கையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பலியாகினர். இப்போரில்உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நினைவேந்தல் குழு ஒருங்கிணைப்பாளர் நிலவன் தலைமையில் நடைபெற்றது. திமுக மாநில துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு மக்களவைத்தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். இந்நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏந்தி பலியான தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.