tamilnadu

img

பழுதடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அவிநாசி, ஏப்.24-அவிநாசி அடுத்த குரும்பபாளையத்தில் இருந்து கன்னடா குளம் செல்லும் சாலை பழுதடைந்து நிலையில் உள்ளது. இதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட வேடுபாளையம் ஊராட்சி குரும்பபாளையம் இருந்து கன்னடா குளம் வரை செல்லும் தார்ச்சாலை 7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்நிலையில் குரும்பபாளையம் குளம் அருகில் பாலம் கட்டப்படாமல் குழாய் மட்டுமே பதிக்கப்பட்டன. அதற்கு மேல் தார் சாலை போடப்பட்டன. இதனால் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடிகின்றன. கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் சாலை பழுதடைந்து உள்ளதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே பழுதடைந்தசாலையை உடனே சீரமைக்க அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். இதுகுறித்து வேடுபாளையம் ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது, பாலம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரம் என்பதால் பணிகள் செய்ய முடியவில்லை. தேர்தல் முடிந்தவுடன் பணிகளை உடனடியாக துவங்கப்படும் என கூறினார். 

;