tamilnadu

பொள்ளாச்சி மற்றும் ஈரோடு முக்கிய செய்திகள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்தநாள் விழா ஆயிரம் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கல்  

பொள்ளாச்சி, ஜன.23-  விடுதலை போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் 123  ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி  மாண வர்களுக்கு  மரக்கன்று வழங்கப்பட்டது. சுபாஷ் சந்திரபோஸ் 123 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பு  சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் வியாழ னன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு1000 பேருக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவிற்கு சுபாஷ் சந்திரபோஸ் இளை ஞர் பேரவையின் தலைவர் மணிகண்டன் தலைமை வகித் தார். செயலாளர் செந்தில்குமார்  வரவேற்று  பேசினார்.  இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட மத்திய கூட்டு றவு வங்கித் தலைவர் வி.கிருஷ்ணகுமார், ந.க.ம கல்லூரி யின் வரலாற்றுத் துறை தலைவர் முத்துக்குமரன், பொள் ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் டி.ராஜா உள்ளிட்டோர் சிறப்பு உரையாற்றினர். இந் நிகழ்ச்ச் ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு

ஈரோடு,ஜன 24- ஈரோட்டில் நடை பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை முதன்மைச் செயலர், கா.பாலச்சந்திரன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ள தாவது, ஈரோடு மாநகராட் சிக்குட்பட்ட சூரம்பட்டி, வேப்பம்பாளையம் சித் தோடு, வேப்பம்பாளையம், பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சி, அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை பார் வையிட்டு ஆய்வு செய்தார்.   இந்த ஆய்வு நிகழ்ச் சியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட வரு வாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கனர் முனைவர் மு.பாலகணேஷ்  உள்ளிட்ட பலர் உடனிருந்த னர்.

 

மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு, ஜன. 24- ஈரோடு மாவட்டத்தில் உயர் ஆதரவு தேவையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1000 பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளதாவது, உயர் ஆதரவு தேவையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குறைபாடு உடைய அன்றாட நடவடிக்கைகளில் தனது தேவைகளை பூர்த்தி செய்ய தடைபட்டுள்ளவர்கள், சமூக பொருளாதார நிலை ஆகியவற்றில் பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளியின் குடும்ப உறுப்பினர்க்கு மாதம் ரூ.1000 பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விண்ணப்பிக்க விரும்பிய மாற்றுத் திறனாளியின் பெற்றோர், பாதுகாவலர்கள்  ஆகியோர் பிப்.5 ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) மாவட்ட  நல அலு வலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் வைப்பு நிதியில் மோசடி மனிதவள மேம்பாட்டு அதிகாரி கைது

கோவை, ஜன. 24 -   தனியார் நிறுவனத்தில் தொழிலா ளர்களின் வைப்பு நிதியை ஏமாற்றி தனது  கணக்குக்கு மாற்றிய மனிதவள மேம்பாட்டு  அதிகாரியை கோவை பந்தய சாலை காவல் துறையினர் கைது செய்து சிறை யில் அடைத்தனர். கோவை அடுத்த சிறுமுகை பகுதியில் எஸ்பி அஃப்பியரன்ஸ் என்ற தனியார் பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த  நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் மனித வள மேம்பாட்டுப் பிரிவு அலு வலராக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், பிரகாஷ் கடந்த சில மாதங்களாகவே தொழிலாளர்களின் வைப்பு நிதியை தன் கணக்குக்கு மாற்றி மோசடி செய்து வருவதாக புகார் எழுந் தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வருங்கால வைப்பு நிதி அலுவலர் வேல் ராஜ் கோவை பந்தய சாலை காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோச டியில் ஈடுபட்ட பிரகாஷை கைது செய்த னர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணை யில், அவர்  50 ஆயிரத்துக்கும் அதிகமான  வைப்பி நிதியை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

;