tamilnadu

img

கோவை மாநகரில் குடிநீர் புகாருக்கு தொலை பேசி எண்கள் வெளியீடு

கோவை, ஜுன் 2-கோவை மாநகரில் குடிநீர் தொடர்பான புகாருக்கு தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.கோயம்புத்தூர் மாநகராட்சியில் கோடை கால குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம் சனியன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நிர்வாக பொறியாளர்கள், உதவி நிர்வாக பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.தற்போதுள்ள குடிநீர் ஆதாரங்கள்படி பெறப்படும் சராசரி குடிநீர் தினசரி 180 மி.லி. ஆக உள்ளது. இதனைக் கொண்டு குடிநீர் விநியோக கால இடைவெளி (குசநளூரநnஉல டீக றுயவநச ளரயீயீடல) நாட்கள் குறைத்து விநியோகம் செய்வது மற்றும் சீரான குடிநீர் விநியோகத்தினை உறுதிபடுத்தவும் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர் வழங்கிட அனைத்து பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக பணியாளர்கள் எவ்வித விடுப்பின்றி பணிபுரிய கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் குடிநீர் தொடர்பான தங்களது குறைகளை மாநகராட்சி பிரதான அலுவலகம் 0422 2302323, கணபதி எம்.எஸ்.ஆர் டேங்க் 0422 25119110422, பாரதி பார்க் டேங்க் 0422 2442236, காந்தி பார்க் டேங்க் 04222471009, சாரதா மில் டேங்க் 0422 2676700, புலிய குளம் டேங்க் 0422 2316267, கிழக்குமண்டல அலுவலகம் 0422 2577056,மேற்கு மண்டல அலுவலகம் 0422 2551700, வடக்கு மண்டல அலுவலகம் 0422 2243133, தெற்கு மண்டல அலுவலகம் 0422 2252481, மத்திய மண்டல அலுவலகம் 0422 2215618 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாநகராட்சி அலுவலகம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.