tamilnadu

பேக்கேஜிங் படிக்கலாம்

மத்திய அரசின்கீழ் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங்’ கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள இக்கல்வி நிறுவனத்திற்கு டில்லி, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் மையங்கள் உள்ளன.படிப்பு: போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பேக்கேஜிங் - 2 ஆண்டுகள்.தகுதி: அறிவியல், கணிதம், மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, வேளாண்மை, புட் சயின்ஸ், பாலிமர் சயின்ஸ், பொறியியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் முழுநேர படிப்பாக இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை நேரடியாக சென்னை உட்பட 6 இடங்களில் உள்ள ஐ.ஐ.பி., கல்வி நிறுவனங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்லூரி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும்.தேர்வு முறை: ஐ.ஐ.பி., கல்வி நிறுவனத்தால் பிரத்யேகமாக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 7 / நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 13 / விபரங்களுக்கு: றறற.iiயீ-in.உடிஅ