tamilnadu

img

கார்ப்பரேட் கொள்ளைக்காகவா தேசிய நெடுஞ்சாலைகள்? 13 ஆண்டுகளாக நிறைவேறாத என்.எச்.67

மத்திய பாஜக ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்கள்கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆதாயத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்படுகின்றன. இதற்கு உதாரணம் கோவை - நாகை தேசிய நெடுஞ்சாலை - என்எச் 67. 2006க்கு முன்பே அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி நாகப்பட்டணத்தில் துவங்கும் சாலை திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி,குளித்தலை, கரூர், வெள்ளக்கோவில், காங்கயம், பல்லடம், சிங்காநல்லூர், கோவை, மேட்டுப்பாளையம், உதகை, கூடலூர் வழியாக கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் முடிவடையும். மொத்தம் உள்ள 555 கிலோமீட்டரில் 505 கிலோமீட்டர் தமிழகத்

தில்தான் உள்ளது. இந்த சாலையைஅமைப்பதால் அதிக ஆதாயம் பெற முடியாது என்று கருதியதாலோ என்னவோ நெடுஞ்சாலைத்துறையினர் போதிய அக்கறை காட்டவில்லை. சேலம் 8 வழிச்சாலைக்காக தமிழக முதல்வர் பழனிச்சாமி காட்டிய ஆர்வத்தில் சிறிதளவுகூட இந்த திட்டத்தில் காட்டவில்லை என்கிறார்கள் இப்பகுதி மக்கள். வசூலுக்காகவே சாலைகளா? திட்டத்தை நிறைவேற்றும் வகையில் கோவையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்கஉள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்காக ரூ.535 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள மேட்டுப்பாளையம் சாலையுடன் இணைத்து சுங்க கட்டணம் வசூலுக்கும் அந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.


பழைய சாலைக்கும் சேர்த்து சுங்க கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கும் வகையில் 17 கிலோமீட்டர் குறைவான தூரம்கொண்ட மாற்று வழியை பொதுமக்கள் முன்வைத்தனர். அதை நிராகரித்த நெடுஞ்சாலைத்துறை, புறவழிச்சாலை திட்டத்தையே கைவிட்டுள்ளது. அதன் மூலம் சுங்க கட்டண வசூலை மையமாக கொண்டே இத்தகைய திட்டங்கள் கொண்டுவரப்படுவது அம்பலமாகி உள்ளது. 

மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் இருந்தும் கடந்த5 ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்ற அக்கறை காட்டவில்லை. இவர் 2017 ஆம் ஆண்டுவரை சாலை போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலை துறையையும் தன்னிடம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கடந்த 2 மாதங்களாக சில கண்துடைப்பு வேலைகள் நடப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தங்களது சாதனையாக பாஜகவினரால் கூற முடியாத அளவுக்கு இந்த சாலை மக்களுக்கு வேதனை அளித்துள்ளது.


பி.ஆர்.நடராஜன் முயற்சி


நான்குவழி சாலையான என்எச் 67, கோவை மாவட்டம் சூலூரில் இருவழி சாலையாக உள்ளது. இந்த சாலையை நான்குவழியாக விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கரூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு சூலூரிருந்து சென்ற சுமார் ஆயிரம் பேர் 2013 ஏப்ரலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இதில் கலந்துகொண்டார். அதோடு மக்கள் பிரதிநிதி

களுடன் சென்று புதுதில்லியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையர் மற்றும் அமைச்சர் பி.சி.ஜோசியை சந்தித்து பேசினார். சுங்கம் வசூலிப்பதை தவிர்க்கும் வகையில் 17 கி.மீ குறைவான தூரத்தில் பொதுமக்கள் கூறியபடி சாலை அமைக்க உதவுமாறு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் வலியுறுத்தினார். கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலின்போதும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது தேர்தல் வாக்குறுதியாகவும் என்.எச்.67 சாலையை குறிப்பிட்டிருந்தார். ஆனாலும், மத்திய மாநில ஆட்சிகளை நடத்தி வரும் பாஜகவோ அதிமுகவோ சொன்னதை செய்யவில்லை என்பது வாக்காளர்களின் குற்றச்சாட்டாகும்.


-சி.முருகேசன்

;