கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்து விட்டது. நாள் தோறும் 1500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வந்த ஈரோடு சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. கடை வீதியில் திரண்டு வேலை தேடி அன்றா டம் வாழ்க்கையை நடத்தி வந்த முறைசாரா தொழிலாளர்கள் இன்று வேலையின்றி தவிக்கின்றனர். ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேலை கிடைக்குமா என்ற நம்பிக்கையில் தொழிலாளர்கள் காத்தி ருக்கின்றனர்.