tamilnadu

img

பாஜகவில் பிரதமர் முதல் கோவை வேட்பாளர் வரை பொய்யர்கள்

கோவை, ஏப்.16- பாஜக-வில் பிரதமர் முதல் கோவை வேட்பாளர் வரை பொய்யர்களாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.கோவை மக்களவை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை செவ்வாயன்று புலியகுளம் பகுதியில் துவக்கினார். முன்னதாக, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அவர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போதுஅவர் பேசுகையில், பா.ஜ.க.வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவருடைய தேர்தல் அறிக்கையில் ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.எஸ்.டி.யால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மாறி, மாறி கூறியுள்ளார். ஆகவே, ஜி.எஸ்.டி. தொடர்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் சொல்வதில் எது உண்மை என்று தெரியவில்லை. மாறாக, வாக்குகளுக்காக சி.பி.ராதாகிருஷ்ணன் பொய் பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது. இவ்வாறு பாஜகவின் பிரதமர் முதல் வேட்பாளர்கள் வரை பொய்யர்களாக உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். ஆகவே, கடந்த 5 ஆண்டுகள்மக்கள் அனுபவித்த துன்பங்களை மனதில் கொண்டு மக்களுக்கு சேவை செய்யும் வேட்பாளர்களை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் சிந்தித்துவேட்பாளர்களின் தகுதி மற்றும் செயல்பாடுகளை பார்த்து வாக்களிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்முன்னதாக, இந்தப் பிரச்சார பயணத்தில் திமுகவின் மாநகர மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு நகர செயலாளர் என். ஜாகீர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


பல்லடம்


முன்னதாக, திங்களன்று மாலை பல்லடம் நகருக்கு உட்பட்ட வடுகபாளையம் முனியப்பன் கோவில்,மேற்கு பல்லடம், ஆதிதிராவிடர் காலனி, கொசவம்பாளையம், சிடிசி காலனி, அண்ணா நகர்,கொடி மரம், மாணிக்காபுரம் ரோடு,பாரதிபுரம், ஜே.கே.ஜே காலனி, பிடிஓ காலனி, பள்ளிவாசல் வீதி,என்ஜிஆர் ரோடு, பஸ் நிலையம்,பச்சாபாளையம், பனப்பாளையம், இராயர்பாளையம், கரையாம்புதூர், தெற்குபாளையம், நாரணாபுரம், கல்லம்பாளையம் மற்றும் சேடபாளையம் ஆகிய பகுதிகளில்மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அவர் சென்ற பகுதிகளில் பெண்கள் ஆரத்தி எடுத்துவரவேற்றனர். பொது மக்கள் உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.முன்னதாக, இப்பிரச்சார பயணத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர்ப் பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், மதிமுகஒன்றியச் செயலாளர் மு.சுப்பிரமணியம், நகரச் செயலாளர் மா.பாலசுப்பிரமணியம், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் புண்ணியமூர்த்தி, நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி ஓ.ரங்கசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின்மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் உள்பட திமுக, மதிமுக, கொமதேக, இந்தியகம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உள்பட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஊழியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

;