tamilnadu

தென்னந்தோப்புக்குள் புகுந்த யானைகள்

கோவை, ஜூன் 23- பொள்ளாச்சி அருகே தென்னந்தோப்புக்குள்  புகுந்த இரு காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை  மரங்களை சேதப்படுத்தின. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலிருந்து வெளியேறிய இரு யானைகள் பொள்ளாச்சி பகுதி யில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள் சனியன்று அதி காலை புகுந்தது. அங்கு 50க்கும் மேற்பட்ட தென்னை  மரங்களை சாய்த்து அவற்றிலிருந்த குறுத்துகளை ருசித்துள்ளது. சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் யானை களை அங்கிருந்து விரட்டினர்.