tamilnadu

img

சேலம் காவல் ஆய்வாளரை கண்டித்து சிபிஎம்- திருநங்கையர்கள் சாலை மறியல்

சேலம், ஜூன் 21- சேலம் மாநகரம் பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் சாலைராம் சக்தி வேல் தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருநங்கையர் கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாநகர பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வாள ராக சாலைராம் சக்திவேல்  பொறுப்பேற்றார். இவர் பணிக்கு வந்த நாள் முதல் மனித உரிமை மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து குற்றசாட்டு கள் எழுந்து வந்தன. குறிப்பாக, பணி நேரங்களிலும் சீருடை அணியாமல் உலா வருவதும், திரு நங்கைகள், சாலையோர வியாபாரி கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர் களை தேவையின்றி அச்சுறுத் வதும், கொடூரமாக தாக்கி பொய்  வழக்கு பதிந்து சிறையில் அடைப் பதும் அவரது அன்றாட வாடிக்கை யாக இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், கடந்த மாதம் திருநங் கையார் ஒருவரை காவல் ஆய்வாளர் சாலைராம் சக்திவேல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி யதால் அவர் மருத்துவமனையில் ஒரு மாத காலம் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியது.  

இந்நிலையில், சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் சாய்ராம் சக்திவேலை பணியிடை நீக்கம் செய்யக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநகர செயலாளர் எம்.முருகேசன் தலைமையில் வெள்ளியன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி. கண்ணன், என். பிரவீன்குமார் மற்றும் மாநகர வடக்கு குழு உறுப் பினர்கள், விசிக மாநகர செயலா ளர் காஜாமைதீன், திருநங்கைகள், சாலையோர வியாபாரிகள்க உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட  கலந்துகொண்டு காவல் ஆய்வா ளரை கண்டித்தும், தமிழக காவல் துறையை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இப்போராட்டத்தில் ஈடுபட் டோர் கூறுகையில், காவல் ஆய் வாளர் சாலைராம் சக்திவேல் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் உறவினர் என்ப தால் தொடர்ந்து திருநங்கைகளி டம் வரம்பு மீறி நடந்து கொள் கிறார். அவரை எதிர்த்து கேள்வி கேட்டால் பொய் வழக்கு போட்டு  சிறைக்கு அனுப்பி விடுவதாக மிரட்டுகிறார். இந்த ஜனநாயக நாட்டில் நாங்கள் வாழ்வதற்கு வழி இல்லாத நாடாக தமிழ்நாடு மாறி வருவகிறது. இது போன்ற காவல் ஆய்வாளரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து அவர் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.