வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

தோழர் கே.தங்கவேல் மறைவு – மார்க்சிஸ்ட் கட்சியினர் செவ்வஞ்சலி

கோவை, செப். 13-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மறைந்த தோழர் கே.தங்கவேல் அவர்களின் உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியி னர் அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன் னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் கே.தங்கவேல் ஞாயிறன்று கோவையில் தனியார் மருத்துவமனை யில் காலமானார். இவர் ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தின் செயலாளராக வும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக் கானப் போராட்டத்திலும் தனது இறுதி மூச்சுள்ளவரை களப்பணியாற்றியவர். தோழர் கே.தங்கவேல் அவர்களின் மறைவையடுத்து பல்வேறு மாவட்டங்க ளில் உள்ள அனைத்து இடைக்கமிட்டி கள் மற்றும் கிளைகளில் இரங்கல் கூட் டம் நடைபெற்றது. இதில் கே.தங்கவேல் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சி மற்றும் வர்க்க வெகு ஜன அரங்கங்களின் ஊழியர்கள் அஞ் சலி செலுத்தினர்.

 மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளா ளர் எம்.ஆறுமுகம், மாவட்ட நிர்வாகி சிவ சாமி, சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ யு.கே. வெள்ளிங்கிரி, மூத்த தோழர் என்.வி.தாமோதரன் மற்றும் சிபிஎம் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினர்.  இதேபோல், மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் நடைபெற்ற இரங்கல் கூட்டங்களில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு, மாவட் டக்குழு, இடைக்குழு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று கே.தங்க வேல் அவர்களுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டகுழு அலுவலகம், அந்தியூர், கோபி, பெருந்துறை, கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடை பெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தோழர். கே.தங்கவேல் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் உதகை, எருமாடு, அய்யங்கொல்லி, அம்பல மூலா, சேரம்பாடி, கோத்தகிரி, கஸ்தூ ரிபா காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த அஞ்சலி கூட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ‌எம்.எம். ஹனீபா மாஸ்டர் மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செய லாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

சேலம்

சேலம் சிறை தியாகிகள் நினைவகம் முன்பு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் ஏ.மோகன் மற்றும் சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர் கள் என திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட குழு அலுவல கம், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, திருச் செங்கோடு, பள்ளிபாளையம், எலச்சி பாளையம், வையப்பமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற இரங்கல் நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலா ளர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ் சலி செலுத்தினர்.

;