tamilnadu

img

சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

கோவை, டிச. 28 - கோவை சீரநாயக்கன்பா ளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலி யல் வன்கொடுமை செய்ததாக மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.  கோவை சீரநாயக்கன்பா ளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது உறவினருடன் பிறந்தநாளை கொண்டாட கடந்த நவ.26ம் தேதி அருகிலுள்ள பூங்கா பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த 6 பேர் கொண்ட கும்பல் சிறுமியின் உற வினரை தாக்கிவிட்டு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை வீடியோ பதிவும் செய்துள்ளதாக தெரிகி றது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தரப்பில் கடந்த நவ. 28 ஆம் தேதி ஆர்.எஸ்,புரம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து ராகுல் (21), பிரகாஷ்(22), கார்த்திகேயன் (28) மற்றும் நாராயண மூர்த்தி(30) ஆகியோரை போலீஸார் கைது செய்து போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் கடந்த டிச.3ம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் சரண டைந்தார். இந்த நிலையில் சம்ப வத்தில் தொடர்புடைய வடவள்ளி நியூ தில்லைநகரை சேர்ந்த பெரு மாள் என்பவரது மகன் மணிகண் டன் (29) என்பவரை தற்போது காவல்துறையினர் கைது செய் துள்ளனர்.