tamilnadu

கோவை அம்பேத்கர் மைய மாணவர்கள் 26 பேர் வெற்றி

டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இலவச பயிற்சி வகுப்புகளில் பயின்ற 24 பேர் வங்கித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் இரண்டு பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அங்கமான டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் இன்சூரன்ஸ், வங்கி, சிஐடியு(போக்குவரத்து), பி.எஸ்.என்.எல்., அரசுஊழியர்கள் சங்கங்களின் சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கோவையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கக் கட்டிடங்களில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஏப்ரல் 1 ஆம் தேதியன்று, வங்கியில் அதிகாரிகள் மற்றும்ஊழியர்கள் பணியிடங்களை நிரப்பும் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் அதிகாரிகள் தேர்வில் 7 பேரும், ஊழியர்கள் தேர்வில் 11 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களில் ஊழியராகத் தேர்வாகியுள்ள பால்பாண்டி பார்வையற்ற மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தில் கனரா வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவுகளும் வெளியாகின. அதில் கோவை அம்பேத்கர் மைய மாணவர்கள் மூன்றுபேர் தேர்ச்சி பெற்றனர். அதோடு, கிராம வங்கி அதிகாரிகளுக்கான தேர்வில் சரவணன் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்ச்சி பெற்றுள்ளார். பாரத ஸ்டேட் வங்கித் தேர்வில் இரண்டு பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.


டி.என்.பி.எஸ்.சி


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் கோவை அம்பேத்கர் மையத்தைச் சேர்ந்த மரியா மற்றும் அருண்பிரசாத் ஆகியோர் வெற்றி பெற்றனர். மரியா, வருவாய்த்துறையிலும், அருண் பிரசாத், நகரப் பஞ்சாயத்துத் துறையிலும் பணியமர்த்தப்படுகிறார்கள்.


;