சேலம், அக்.15- சேலம் மாவட்டத்தில், பள்ளிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகள் திங்களன்று நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியரின் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளுக்கு இடையிலான மாவட்ட அளவில் சதுரங்கப் போட்டி சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 250 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.