கோவை, ஜன. 11 – கீரணத்தம் ஊராட்சியில் நடை பெற்ற மறைமுக தேர்தலில் மார்க் சிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால் துணை தலைவராக தேர்வு செய் யப்பட்டார். தமிழகத்தின் 27 மாவட்டங்க ளில் உள்ள ஊரக உள்ளாட்சி களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. கோவை மாவட் டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங் களில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பி னர் பதவிகளுக்கும், 228 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக் கும், 2034 ஊராட்சி வார்டு உறுப்பி னர் பதவிக்கும் என மொத்தம் 2434 பதவிக்கு தேர்தல் நடை பெற்றது. இத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவின் அதிகார பலம், பணபலம் அனைத்தையும் முறியடித்து கடந்த தேர்தலை காட்டிலும் திமுக கூட்டணி பெரு மளவு இடங்களை கைப்பற்றியது. இதில் கீரணத்தம் ஊராட்சி யில் திமுக கூட்டணி 9 வார்டுகளை யும் முழுமையாக கைப்பற்றியது. இதில் கீரணத்தம் ஒன்றிய கவுன் சில் திமுகவின் கருப்புசாமி, பஞ்சா யத்து தலைவர் திமுக ப.தோ.ராசு (எ) பழனிச்சாமி, 1 ஆவது வார்டு கல்பனா (திமுக), 2 ஆவது வார்டு ரஞ்சிதாமணி (மார்க்சிஸ்ட் கட்சி), 3 ஆவது வார்டு கே.வடிவேல் (மார்க்சிஸ்ட் கட்சி) 4 ஆவது வார்டு ஜி.குணசுந்தரி (கொமதேக), 5 ஆவதுவார்டு தமிழரசி (திமுக), 6 ஆவது வார்டு ஆர்.பால்ராஜ் (திமுக), 7 ஆவது வார்டு எம்.ரேவதி (மதிமுக), 8 ஆவது வார்டு என்.பர மேஸ்வரன் (கொமதேக) 9 ஆவது வார்டு ஆர்.கோபால் (மார்க் சிஸ்ட் கட்சி) ஆகியோர் வெற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்து சனி யன்று துணைத் தலைவரை தேர்ந் தெடுப்பதற்கான மறைமுக தேர் தல் கீரணத்தம் ஊராட்சி அலுவல கத்தில் நடைபெற்றது. இதில் கீர ணத்தம் ஊராட்சியின் துணை தலைவராக ஆர்.கோபால் தேர்ந் தெடுக்கப்பட்டார். இவர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.எஸ்.குளம்ஒன்றிய செயலா ளராகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் கோவை மாவட்ட தலைவருமாக பணியாற்றியவர். மேலும், கடந்த ஊராட்சி தேர்தலிலும் கீரணத்தம் ஊராட்சி உதவி தலை வராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக மக்கள் பணியாற்றிய தும் குறிப்பிடத்தக்கது. ஊராட்சி துணைத் தலைவராக வெற்றி பெற்ற கோபாலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, ஊராட்சி தலைவர் ப.தோ.ராசு (எ) பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சி லர் ஆர்.கருப்புசாமி மற்றும் கூட் டணி கட்சிகளின் தலைவர்கள், பொதுமக்கள் சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தனர்.