திருவனந்தபுரம், ஏப். 17 -உடைகளைக் களைந்தால், முஸ்லிம்களின் அடையாளத்தை அறிந்து கொள்ளலாம் என்று கேரள மாநில பாஜக தலைவர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் அட்டிங்கல்லில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்ரீதரன் பிள்ளை பேசியுள்ளார். அப்போது, பாலகோட் விமானத் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட் டார்கள்? அவர்களில் எத்தனை பேர்இந்துக்கள், எத்தனை பேர் முஸ்லிம் கள்? என்று காங்கிரசாரும், இடதுசாரிகளும் கேட்பதாகச் சொல்லி, தானாகவே ஒரு கேள்வியை உருவாக்கி அதற்கு பதிலளித்துள்ளார். அதாவது, “இறந்தவர்களின் உடைகளைக் களைந்து பார்த்தால் அவர்கள் முஸ்லிம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்” என்று அநாகரிகமான முறையில்கூறியுள்ளார்.இதற்கு கேரளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஸ்ரீதரன் பிள்ளையின் இந்த சர்ச்சையான பேச்சு குறித்து, தேர்தல் ஆணையத்திடம் இடது ஜனநாயக முன்னணி புகார் அளித்துள்ளது.அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால், தான் அவ்வாறு பேசவில்லை என்றும், தன்மீதான குற்றச் சாட்டு பொய் என்றும் ஸ்ரீதரன் பிள்ளைபின்வாங்கியுள்ளார்.