tamilnadu

இருவருக்கு வைரஸ் தொற்று: ஆரஞ்சு மண்டலமானது கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, மே 6- கிருஷ்ணகிரியில் முதல்முறையாக இரண்டு  பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியிலிருந்து கோயம்பேடு பூ மார்க் கெட்டிற்கு தினசரி பூக்களை ஏற்றுமதி செய்யும் ஒரு  பெண்ணுக்கும், பெங்களூரு வில் திருமணத்திற்குச் சென்று திரும்பிய ஒரு பெண்ணுக்கும், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வெளி யான பரிசோதனை முடிவு களில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப் பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர். இதனிடையே, சூளகிரி பகுதி கட்டுப்பாட்டுப் பகுதி யாக அறிவிக்கப்பட்டு, அங்கு  தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக விளங்கிய கிருஷ்ணகிரி யில் முதல் இருவருக்கு பாதிப்பு உறுதிசெய்யப் பட்டுள்ளதையடுத்து, மாவட்டம் பச்சை மண்டலத் தகுதியை இழந்து ஆரஞ்சு  மண்டலத்துக்கு மாற்றப் பட்டுள்ளது.