tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்..

சச்சினுக்கு இப்படி ஒரு நிலைமையா? 


1994-ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட்போட்டியில் இந்திய அணிக்காக முதன் முறையாக தொடக்க வீரராகக்  களமிறங்கினேன். விக்கெட்டுகள் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக புதிய வியூகத்தைக் கையாண்டேன். அந்த வியூகத்தில் தொடக்க வீரராகக் களமிறங்கி எதிரணி பந்து வீச்சாளர்களைத் திணறச் செய்வது தான் எனது வியூகம். வியூகம் அமைப்பதை விடத் தொடக்க வீரராகக் களமிறங்க அதிகம் சிரமப்பட்டேன். இதற்காக அணி நிர்வாகத்தில் உள்ள அனைவரிடமும் எனக்குத் தொடக்க வீரராக விளையாட ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள், அதில் தோல்வி அடைந்துவிட்டால், மீண்டும் உங்களிடம் இதுபற்றி கேட்கமாட்டேன் எனக் கெஞ்சிக் கேட்க வேண்டியிருந்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய முதல் போட்டியில்  82 ரன்கள் எடுத்தேன். இதனால் எனக்கு மற்றொரு சந்தர்ப்பம் கொடுக்கும்படி கேட்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர்கள் என்னைத் தொடக்க வீரராகத் தொடர்ந்து களமிறக்க ஆர்வம் காட்டினர். அதனால் தோற்று விடுவோம் என அஞ்சி ரிஸ்க் எடுக்கத் தயக்கம் கொள்வது கூடாது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு சச்சின் வீடியோ தொகுப்பு மூலம் அறிவுரை கூறியதிலிருந்து...