நாட்டின் பிரபலமான முதல் தர கிரிக்கெட் தொடரான சி.கே.நாயுடு டிராபி தொடரில் தில்லி அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சக அணி வீரர்களுடன் கொல்கத்தாவில் உள்ள பிரபல உணவகத்தில் தங்கியிருந்தார். அப்பொழுது அங்கிருந்த பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்றதாக குல்தீப் யாதவ் மற்றும் சக வீரர் லக்ஷய் தரேஜா ஆகியோரை உணவக நிர்வாகம் வெளியே அனுப்பியுள்ளது. இது குறித்து தில்லி அணி நிர்வாகம், உணவக நிர்வாகத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பின்னர் காவல்துறையில் புகார் ஏதும் அளிக்காமல் அவர்களை இரக்கப்பட்டு மன்னித்து விடுவதாகக் கூறியுள்ளது. இதனால் குல்தீப் யாதவ், லக்ஷய் தரேஜா ஆகியோர் வழக்கு பிரச்சனையின்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். எனினும் இது குறித்து தில்லி அணி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.