உலகக் கோப்பைப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், உலகக் கோப்பைப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில், சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத் கான் சேர்க்கப்பட்டுள்ளார். அதுபோல அதிரடி ஆட்டக்காரர் ஆசிப் அலியும் சேர்க்கப்படவில்லை.
பாகிஸ்தான் அணியின் வீரர்கள் பட்டியலில், சர்பிராஸ் அகமது (கேப்டன்), பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், ஷாதப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, பாஹீம் அஷ்ரப், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஜுனைத் கான், முகமது ஹஸ்னைன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.