tamilnadu

img

எத்தனை சாதனைகள் படைத்தாலும் ஸ்மித் ஏமாற்றுக்காரர் தான்

இங்கிலாந்து வீரர் ஹார்மிசன் சர்ச்சை பேச்சு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் முன்னாள் கேப்டன் ஸ்மித் பந்தைச் சேதப் படுத்திய வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து ஒருவருட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். யாரும் எதிர்பாராத வகையில் சூப்பர் பார்மில் ஜொலிக்கும் ஸ்மித்தின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் முன்னிலை வகிக்கிறது.    இந்நிலையில், இங்கி லாந்து நாட்டின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹார்மிசன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை கூறியுள் ளார். அதில், “ஆஸ்திரே லியாவின் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச அளவில் எத்தனை சாதனைகள் படைத்தாலும், அவர் ஒரு ஏமாற்றுக்காரர் தான். அவருக்கு மன்னி ப்பே கிடையாது” எனக் கடு மையாக விமர்சித்துள்ளார்.

தண்டனை அனுபவித்து, கேலி கிண்டல்களைப் பொறுத்துக் கொண்டு, மனதைக் கல்லாகக் கரைத்து சூப்பர் பார்முடன் தற்போது கிரிக்கெட் உலகை ஸ்மித் மிரட்டி வருகிறார். மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியை  பின்னுக்குத் தள்ளி (டெஸ்ட்) முதலிடத்தில் அமர்ந்துள் ளார்.ஸ்மித்தின் இந்த கடின உழைப்பிற்கு ஹார்மிசன் தனது சர்ச்சை கருத்தால் அவரது அங்கீகாரத்தை இழக்கச் செய்துள்ளார். ஹார்மிசனின் சர்ச்சை பேச்சு கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற் படுத்தியுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.