tamilnadu

img

அமெரிக்கா - சீனா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

வாஷிங்டன்/பெய்ஜிங், ஜன.16- சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஜனவரி 15 வியாழனன்று புதியதொரு வர்த்தக ஒப்பந்தம்  ஏற்பட்டுள்ளது. இது சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடைபெற்று வந்த ‘வர்த்தகப் போரால்’ ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என டிரம்ப் நம்புகிறார். இது இருநாடுகளுக்கும் நன்மையளிக்கும் ஒரு ஒப்பந்தம் என்றும், இதனால் இருநாடுகளுக்குமான உறவு மேம்படும் என்றும், சீனா தெரிவித்துள்ளது. சீனாவில் அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 200பில்லியன் அமெரிக்க டாலர்க ளாக உயரும் எனவும், அறிவுசார் சொத்து தொடர்பான விதிமுறைகள் வலிமைப்படுத்தப்படும் எனவும் சீனா உறுதியளித்துள்ளது. அதற்கு பதிலாக அமெரிக்கா, சீனப் பொருட்கள் மீது விதித்த தடையை பாதியாக குறைப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் மாறிமாறி வரிகளை விதித்து  பாசிச நடவடிக்கையில் ஈடுபட்டன. இந்த பிரச்சனை யால், இருநாடுகளுக்குமான வர்த்தக நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டதுடன், உலக பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.  முதலீட்டாளர்களையும் கலக்கத்தில் தள்ளியது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திட்ட டிரம்ப், இதன்மூலம் இருநாடுகளுக்குமான உறவு வலிமை பெறும் என தெரிவித்தார்.  “இருநாடுகளும் சேர்ந்து கடந்த காலத்தில் செய்த தவறுகளை சரியாக்கு கிறோம். மேலும் எதிர்காலத்திற்கான பொருளாதாரத்திற்கான பாதுகாப்பை இது வழங்கும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில்  என்ன உள்ளது?

புதிய ஒப்பந்தத்தின்படி சீனா, அமெரிக்க இறக்கு மதி பொருட்களின் அளவை 200பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளது. போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என சீனா தெரிவித்துள்ளது. மேலும் ரகசியமாக நடத்தப்படும் திருட்டு குறித்து நிறுவனங்கள் சட்ட ரீதி யான நடவடிக்கை எடுக்கும் வழிமுறைகள் எளிமை யாக்கப்படும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. சுமார் 360பில்லியன் சீனப் பொருட்கள் மீது 25%  வரை வரி விதிப்பு என்ற அளவை அமெரிக்கா மேற் கொள்ளும், அதேபோல் 100பில்லியன் அமெரிக்க பொருட்கள் மீது சீனா புதிதாக விதித்த வரிகளில் பெரும்பாலும் எந்த மாற்றமும் இருக்காது. “தங்களின் நாட்டின் நிலைக்கு பொருந்தக் கூடிய ஒரு அரசியல் அமைப்பையும், பொருளாதார வளர்ச்சி மாதிரியையும் சீனா உருவாக்கியுள்ளது.”  “அதற்காக சீனா மற்றும் அமெரிக்கா ஒன்றாக பணியாற்ற முடியாது என்று அர்த்தமில்லை,” என சீனாவின் துணை பிரதமர் லீயோ க தெரிவித்துள்ளார்.

சீனா - அமெரிக்கா வர்த்தக போரால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே இதற்கு முன்பு காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன; மோதல்களும் நிகழ்ந்துள்ளன; பல சச்சரவுகளும் இருந்தன.  வரி விதித்து வர்த்தகப் போரை தொடுத்தால், சீனா வுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை முடியும் என டிரம்ப் நம்பினார். அதாவது அமெரிக்கா சீனாவுக்கு செய்யும் ஏற்றுமதியைவிட, சீனாவில் இருந்து செய்யப்படும் இறக்குமதி அதிகமாக இருக்கும் நிலை மாறுமென அவர் நம்பினார். இதன் பொருட்டு சீன பொருட்கள் மீது டிரம்ப் வரி விதித்ததால்,  சீனா கொடுத்த பதிலடியால் அமெரிக்க விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். அமெ ரிக்கா சீனாவுக்கு செய்யும் ஏற்றுமதி ஆண்டுக்கு சுமார் 25பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 7 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்தது. இதுதான் சமீபத்தில் ஏற்பட்ட அதிகபட்ச சரிவு.

அமெரிக்க மக்கள் தொகையில் விவசாயிகள் 1 சதவீதம்தான் என்றாலும், விவசாயிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய அதிகளவில் டிரம்ப் அரசு மானி யங்களும் கொடுக்க வேண்டியிருந்தது. இந்த வர்த்தக போரின்போது சீனாவில் அமெரிக்காவின் முதலீட்டு அளவு நிலையாக இருந்தது. ஆனால் அமெரிக்காவில் சீனாவின் முதலீடு கணிசமாக குறைந்தது.  அமெரிக்காவில் உள்ள அறிவுசார் அமைப்பான அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிட்யூட் அளித் துள்ள தரவுகளின்படி, 2016ஆம் ஆண்டு சீனாவின் முதலீடு 54பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு அது 9.7 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்தது. 2019ஆம் ஆண்டின் முதல் பாதியில், வெறும் 2.5பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே அமெரிக்காவில் சீன நிறுவனங்களால் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் இந்த வர்த்தக போர் தங்களின் வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். 2017ஆம் ஆண்டு வெறும் 45% அமெரிக்க நிறுவனங் கள் மட்டுமே இந்த ஆபத்து குறித்து கவலை கொள்ள நேர்ந்தது. ஆனால் 2018ல் பெரும்பாலான நிறுவ னங்கள் அலறின. இது சீனா, அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகப் பார்க்கப் பட்டது.

சீனாவுடன் ஏற்பட்ட வர்த்தகப் போரால் அமெ ரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் 3% வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து முழுவதுமாக ஒரு வருடத்தில் தெரியவரும் என்கின்றனர். மறுபக்கத்தில் சீனாவின் வளர்ச்சியும் குறைந்து வருகிறது. 2020-ல் அதன் பொருளாதார வளர்ச்சி 6% வரை குறையும் என உலக வங்கி கணித்துள்ளது. இந்நிலையில்தான், புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்படுத்தியுள்ளன. சீனாவை தவிர தங்களின் பிற கூட்டாளி நாடுகளிடமும் வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றியமைக்க அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டாலும், சீனா மற்றும் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களு க்கு ஏற்பட்ட நெருக்கடி மாறிவிடாது. ஏனெனில், அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடி யாத பட்டியலில் சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவே மற்றும் பிற நிறுவனங்கள் சிலவற்றை சேர்த்தது அமெரிக்கா. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவில் சில நிறுவனங்களை பட்டியலில் சேர்த்தது. எனவே, தற்போது ஏற்படும் ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கலாம். ஆனால் இரு நாடுகளுக்கும் தொழில்நுட்ப ரீதியாக நடக்கும் மோதல் முடிவதாக தெரியவில்லை.