கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வடதொரசலூர் தாய் நகரை சேர்ந்தவர் பிரபு. கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கோவில் அர்ச்சகர் மகள் சவுந்தர்யாவை காதல் சாதி மறுப்பு திருமணம் செய்தார்.கடந்த சில நாட்களாக பிரபு எம்.எல்.ஏ.வுக்கு திடீர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் அங்கு உள்ள மருத்துவமனையில் ரத்தம், சளி பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.