வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

2 கோடி டன் தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும்... மத்திய அரசுக்கு அம்ரீந்தர் சிங் வேண்டுகோள்

சண்டிகர்:
மத்திய அரசின் கிடங்குகளில் உள்ள உணவு தானியங்களை ஏழை மக்களுக்குஇலவசமாக வழங்க வேண்டும் என்று பஞ்சாப் மாநிலகாங்கிரஸ் முதல்வர் அம் ரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அம்ரீந்தர் சிங் மேலும் கூறியிருப்பதாவது:கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பெரும்பாலான ஏழைமக்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர். உணவுக்கும் வழியில்லாத நிலையில் அவர்கள் உள்ளனர். பஞ்சாப்பில் உள்ள மத் திய அரசின் கிடங்குகளில், 2 கோடி டன் உணவு தானியங்கள் உள்ள நிலையில், அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் வைரஸில் இருந்து தப்பிய மக்களை, பட்டினிச் சாவில் விழாமல் பாதுகாக்க முடியும். இவ் வாறு அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.

;