tamilnadu

img

புகாரில் காவல்துறையினர் அலட்சியம் குடும்பத்துடன் விவசாயி தொடர் உண்ணாவிரதம்

கரூர், ஜன.25- கரூர் மாவட்டம், திருமாநிலையூரை சேர்ந்தவர் எஸ்.வேலுச்சாமி, இவருக்கு சொந்தமான இடம் கருப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் உள்ளது. அவருக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்திலும், தமிழ்நாடு வக்பு வாரி யத்திற்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் அனுபவபாத்தியம் நிலத்தில் பல தலை முறையாக விவசாயம் செய்து வருகிறார். 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி ஜாஸ்மின், இரண்டு குழந்தைகள் சர்வேஷ், ராகுல் ஆகியோருடன் குடும்பத்து டன் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 7 நாட்களாக உண்ணா விரதப் போராட்டத்தை தனக்கு சொந்த மான நிலத்தில் மேற்கொண்டு வரு கிறார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு தலை மையில், மாவட்ட செயலாளர் கே.கந்த சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெய ராமன் ஆகியோர் நேரில் சென்று அவருக்கு ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி கூறி யதாவது: பல தலைமுறையாக மூன்றரை ஏக்கர் நிலத்தில் திருமாநிலையூரை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அவரது நிலத்தில் 20 மாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வரு கிறார். அவரது நிலத்தில் உள்ள மாடுகளில் ஆறு மாடுகள் மர்மமான முறையில் இறந்துள்ளது.  இதில் கடந்த 14 ஆம் தேதி, 19ஆம் தேதி, 21ஆம் தேதி என அடுத்தடுத்து மாடு கள், கன்றுகள் இறந்துள்ளது. இதற்கு கரூர் மாவட்டத்திலுள்ள தொழிலதிபர் நாச்சி முத்து மற்றும் அவரது மகன் செந்தில் பிரசாத் ஆகியோர் தான் காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார். புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் அவர்களை கைது செய்வதற்கான எந்தவித நட வடிக்கையும் காவல்துறை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.  இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், உட னடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த மாடுகளின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகளை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். முடிவுகளை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த 21 ம் தேதி இறந்த மாட்டின் உடலை பிரேத பரி சோதனை இன்றுவரை செய்யாமல் காவல்துறையினர் அலட்சியமாக உள்ள னர்.  திருமாநிலையூர் ராஜவாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பாசன கவுரு, வடிகால் கவுரு, நீர் வெளியேற்றும் பாதை ஆகியவற்றை ஆக்கிரமித்துள்ளனர். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். கரூர் நகராட்சி ஆணையர் பெயரில் 12 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைத்து, நகராட்சிக்கு சொந்த மான இடம் என பெயர் பலகை வைக்க வேண்டும்.  நீர் நிலை பகுதியான பாசனக் கவுரு, வடிகால் கவுரு, நீர் வெளியேற்றும் பாதை ஆகியவற்றை தொழிலதிபர் நாச்சி முத்து ஆக்கிரமிப்பு செய்து சுற்றிலும் தகரத்தால் சுற்றுச்சுவர் போல தடுப்பு களை அமைத்துள்ளார். அதனால் வடி கால்கள் வழியாக யாரும் செல்ல முடி யாது, இது ஒரு தீண்டாமை சுவர் போல அமைக்கப்பட்டுள்ளது. உடனடியாக அந்த தகர தடுப்புகளை அகற்ற வேண்டும். மேலும் நீர் நிலைகளை தூர்வார வேண்டும் என வேலுச்சாமி பலமுறை மாவட்ட ஆட்சி யர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகி யோரிடம் கோரிக்கை மனு அளித்துள் ளார். பலமுறை மேற்கண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தா மல், மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறது. இதனை கைவிட்டு உடனடியாக கோரிக்கைகளை நிறை வேற்றி, நிரந்தரமான தீர்வு மாவட்ட நிர்வா கம் ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும் வேலுச்சாமி மற்றும் அவரது குடும்பத் திற்கும் உரிய பாதுகாப்பினை மாவட்ட காவல்துறையினர் வழங்கிட வேண்டும்.  தனது கோரிக்கைகள் நிறை வேற்றுவதற்காக தனது குடும்பத்துடன் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது கோரிக்கைகளுக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தி போராட்டத்தை முடி வுக்கு கொண்டு வர வேண்டும் என அவர் கூறினார்.

;