tamilnadu

img

அக்.,5 முதல் தமிழக கபடி அணிகள் தேர்வு

கேலோ இந்தியா விளையாட்டு தொடர் 

17 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் 21  வயதுக்கு உட்பட்ட இளை யோர்களுக்கு கேலோ இந்தியா என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  குறுகிய காலத்தில் பிரபல தொட ராக வளர்ந்துள்ள இந்த கேலோ இந்தியா  தொடரின் முதலாவது சீச னில் (2018) ஹரியானா முதலிடம் பிடித்தது. நடப்பாண்டு (2019) சீசனில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ள நிலையில், 3-வது சீசன் அசாம் மாநில த்தில் வரும் ஜனவரி மாதம் (2020) நடை பெறுகிறது.   இந்த தொடருக்கான தமிழக கபடி அணிகள் (ஆடவர், மகளிர்) வரும் 5-ஆம் தேதி சென்னை நேரு மைதானத்தில் தொடங்கு கிறது. ஆடவர் கபடி அணி தேர்வு 5-ஆம் தேதியும், மகளிர் கபடி அணி தேர்வு 6-ஆம் தேதியும் நடை பெறுகிறது.   பள்ளி மாணவர்கள் பிரிவில் பங்கேற்பவர்கள் 1-1-2003 அன்றோ அதற்குப் பின்போ பிறந்து இருக்க வேண்டும். உடல் எடை 56 கிலோவுக்குக் கீழ் இருக்க வேண்டும். 21 வயதுக்கு உட்பட்ட இளையோர் பிரிவில் பங்கேற்பவர்கள் 1-1-1999 அன்றோ அதற்குப் பின்போ பிறந்து இருக்க வேண்டும். ஆட வர் பிரிவில் 75 கிலோ வுக்குக் கீழும், மகளிர் பிரிவில் 70 கிலோவுக்குக் கீழும் இருக்க வேண்டும்.  இந்த தகுதித் தேர்வில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக வயது சான்றிதழுடன் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கபடி தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் காலை 8:30 மணிக்குள் சென்னை நேரு மைதானத்தில் இருக்க வேண்டும்.