tamilnadu

தொடர் விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் வருகை சுற்றுலா தலங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

நாகர்கோவில், ஜன.16- பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ கம் முழுவதும் வருகிற 20 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை விடப் பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா தலங்க ளில் கூட்டம் அலை மோதுகிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரியில் புதன்கிழமை முதல் அதிகமாக சுற்றுலா பய ணிகள் குவிந்தனர். சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் முடிந்து ஊர்களுக்கு திரும் பும் ஏராளமான அய்யப்ப பக்தர்களும் கன் னியாகுமரியில் அதிகமாக வந்து செல்கின் றனர்.  வியாழனன்று அதிகாலையிலேயே கன்னியாகுமரியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாக இருந்தது. கடற்கரையில் சூரிய உதயத்தை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வழக்கமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து நடைபெறும். ஆனால் சுற் றுலா பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு வியாழனன்று காலை 6 மணிக்கே படகு போக்குவரத்து துவங்கியது. சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுற்றுலா பய ணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று கண்டு ரசித்தனர். கடற்கரை, காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கோவளம் நீர் விளை யாட்டு உல்லாச பூங்கா போன்ற இடங்களி லும் கூட்டம் அதிமாக காணப்பட்டது. கன்னி யாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வியாழ னன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்தி ருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  குமரி மாவட்ட சுற்றுலா தலங்களான திற் பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, சொத்தவிளை பீச், சங்குதுறை கடற்கரை போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

;