நாகர்கோவில், ஆக.10- கொள்ளையனே வெளியேறு, தேசத்தை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திங்களன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம், அண்ணா பேருந்து நிலையம், மிடா லக்காடு, குலசேகரம், திருவட்டார், கொல்லங்கோடு, சாங்கை, அருமநல்லூர், மங்காட்டுக்கடை, மேல்புறம், அருமனை உட்பட 500க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், தலைவர் பி. சிங்காரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் ஜெ.சைமன் சைலஸ், செயலாளர் ஆர்.ரவி, துணை தலை வர் என்.முருகேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன், செயலாளர் மலைவிளை பாசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.