சிதம்பரம்,டிச.29- கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக துப்பு ரவு பணியாளராக பணி யாற்றி வந்தவர் கோபால் (55). இவர் கடந்த 15 தினங்க ளுக்கு முன்பு துப்புரவுப்பணி யின்போது மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அவரை சிதம்பரத்திலுள்ள மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சையளித்து வந்த நிலையில் மேல் சிகிச்சை க்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மிகத்தீவிர மான சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்தார். அவரது உடலுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் தரப்பில் மாலை வைத்து மரியாதை செலுத்தவில்லை. பணியில் இறந்த அவருக்கு நிவாரணம் எதுவும் வழங்க வில்லை. இதனால் கோப மடைந்த அவரது உறவி னர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு, அங்கு வந்த புவனகிரி காவல் துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஈமச்சடங்கிற்கு ரூ.30 ஆயிரம் கெடுத்தனர். அரசின் நிவாரணத்தொகை மிக விரைந்து பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்ததால் போரா ட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சதானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கதிர்வேல், ஸ்டாலின், காளி. கோவிந்த ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.