tamilnadu

img

விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை அறிவித்திடுக

சிதம்பரம், ஜன. 19- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் அஞ்சான் நாகூரான் ஞானசேகரன் தியாகிகள் நினைவு தினத்தில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை  கண்டித்து சிதம்பரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி  ஆர்ப்பாட்டம் ஞாயிறன்று (ஜன. 19) நடை பெற்றது. விவசாய சங்க மாவட்ட துணைத் தலை வர்  கற்பனை செல்வம் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா ளர் ஜி.மாதவன், துணைச் செயலாளர் சரவ ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், கரும்பு  விவசாயிகள் சங்கத் தலைவர் ஆதிமூலம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வாஞ்சிநாதன், சிஐடியு துணைத் தலைவர்  மகேஸ்வரன் ஆகியோர் பேசினர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்  பெற வேண்டும், விவசாய விளை பொருட்க ளுக்கு கட்டுப்படியான விலை அறிவிக்க  வேண்டும்,  நெல்லுக்கு கேரள அரசாங்கம்  குவிண்டாலுக்கு 2,600 விலை அறிவித்துள் ளது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும், சமீபத்தில் பெய்த தொடர் மழை  வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல், மணிலா  உளுந்து பயிர்களை முறையாக கணக் கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும்,  நூறு நாள் வேலைத்திட்டத்தை அனைத்து கிராமங்களிலும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

;