tamilnadu

img

ஒற்றையானைக்கு அஞ்சி 600 பள்ளிகள் மூடல்

ஒடிசாவில் ஒற்றை யானைக்கு அஞ்சி 600 பள்ளிகள் மூடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று கொரி தானாகாதி சுகிந்தா பகுதியில் சுற்றி வருகிறது.  காடுகளில் இருந்து நகருக்குள் வரம் இந்த ஒற்றை யானையை வனத்துறையினர் பலமுறை காட்டுக்குள் விரட்டி உள்ளனர். இந்நிலையில்  கொரி பகுதிக்குள் சென்ற யானையை காட்டுக்குள் விரட்ட முயன்றபோது 2 முதியவர்களை மிதித்து கொன்றனது.  இதைத்தொடர்ந்து அம்மாவட்ட மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஒற்றை யானையை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று ஒருநாள் மட்டும் 600 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட கல்வி அலுவலர் குருஷ்ணா சந்திரநாயக் கூறியதாவது, 
ஒற்றை யானை அருகில் இருக்கும் இடங்களில்தான் பதுங்கி உள்ளது. இதன் காரணமாக பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியமானதாக உள்ளது. எனவே இன்று ஒருநாள் மட்டும் 600 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளோம்.  ஒடிசா வரலாற்றிலேயே ஒரு மாவட்டத்தில் இத்தனை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது இதுவே முதல்முறை என்று தெரிவித்துள்ளார். 
 

;