tamilnadu

img

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி : திமுக கூட்டணிக்கு கி.வீரமணி வாழ்த்து

சென்னை,ஜன.4- நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்குத் திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் அறிக்கை வரு மாறு:- உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பகுதி நடந்து முடிந்துள்ளன. இன்னும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல்கள் நடத்தப்படவும் உள்ளன. தனித்தனியாகத் தேர்  தலை அதிமுக அரசு நடத்துவ தன் உள்நோக்கம் வெளிப்படை யாகத் தெரிந்த ஒன்றே. ஆனால்,  அதிமுகவைப் பொறுத்தவரை யில் அதுவும் தப்புக் கணக்கு என்பது பட்டவர்த்தனமாகவே தெரிந்துவிட்டது. ஒன்று மட்டும் உண்மை. இரண்டையும் ஒன்றாக நடத்தியிருந்தால், மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி பெற்றிருக்கும்.

மக்கள் மத்தியில் மத்திய - மாநில அரசுகள்மீது எழுந்துள்ள வெறுப்புக் கோபங்கள்,  கோலங்கள் அவற்றைச் சுட்டுப் பொசுக்கி விட்டன.  பாஜகவைச் சுமந்து முதுகெலும்பு உடைந்தது தான் மிச்சம். ஆளும் கட்சியின்  அதிகார பலம், பண பலம், நிரு வாக பலம் இவற்றையெல்லாம் தாண்டி திமுக கூட்டணி இமா லய வெற்றி பெற்றது என்பது அசாதாரணமானது. 

பெரியார் மண்!

ஒரு நகர சுத்தித் தொழிலாளிப்  பெண், தான் பணியாற்றிய ஊராட்சியிலே வெற்றி பெற்றதும்,  திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றி ருப்பதும் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.17 விழுக்காடும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.65 விழுக்காடு வாக்குகளுமே பாஜக பெற்றதன்மூலம், தமிழ் நாடு பெரியார் மண் என்று நிரூ பிக்கப்பட்டு விட்டது. அதிமுக வுடன் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் இதன் நிலை பூஜ்யம்தான்.

அதேநேரத்தில் திமுக இன்  னும் அதிகம் இடம் பெறவேண் டிய மாவட்டங்களில் எண் ணிக்கை குறைந்ததுபற்றி ஆழ மாகச் சிந்திக்கவேண்டும். சில  இடங்களில் கூட்டணி இல்லாமல், கூட்டணிக் கட்சிகளே எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட நிலை - இவைபற்றி எல்லாம் திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் அமர்ந்து ஆலோசித்து, அடுத்துவரும் நக ராட்சி, மாநகராட்சி தேர்தல்களி லும், முக்கியமாகச் சட்டப்பேர வைத் தேர்தலிலும், குறைபாடு களுக்குச் சிறிதும் இடமின்றி மகத்தான வெற்றி பெற்று, வீழ்ச்சிப் படலத்தில் இடம்பெற்றி ருக்கும் தமிழ்நாட்டைத் தூக்கி நிறுத்தும் அடித்தள பணியில் திட்டத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபடவேண்டியது அவசிய மாகும். இவ்வாறு அவர் தெரிவித்தி ருக்கிறார். இந்தியன் யூனியன் முஸ்லீம்  லீக் தேசியத் தலைவர் கே.எம்.  காதர் மொகிதீன், இந்திய ஜன நாயகக் கட்சித் தலைவர் பாரி வேந்தர் எம்பி உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
 

;