tamilnadu

img

ஐஐடி மாணவி தற்கொலை: சிபிஐ விசாரணை தொடங்கியது

சென்னை, டிச. 30- சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்  பான வழக்கை விசாரணைக்கு ஏற்ற சிபிஐ, முதல்கட்ட விசார ணையை தொடங்கியது. சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த  மாதம் 9 ஆம் தேதி கல்லூரி விடுதி யில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த விவ காரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. தன் மகளின் மரணத்தில் சந்தே கம் இருப்பதாக, மாணவியின் தந்தை தொடர்ந்து கூறி வந்தார். 

இது சந்தேக மரணம் என்று கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசா ரணை நடத்தப்பட்டு வந்தது. பின்னர்  மத்திய குற்றப்பிரிவு விசார ணைக்கு மாற்றப்பட்டது. கூடுதல்  ஆணையர் ஈஸ்வர மூர்த்தி தலை மையில் இந்த விசாரணை நடத்தப் பட்டு வந்தது. தற்கொலைக்கு கார ணம் பேராசிரியர்கள்தான் என பாத்திமா தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். அது தடயவியல் ஆய்வுக்கு உப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று  மாணவி பாத்திமாவின் தந்தை,  மத்திய அரசிடம் முறையிட்டி ருந்தார். ஐஐடி மாணவர்கள் தற்கொலை விவகாரம் அனைத்தை யுமே சிபிஐ விசாரிக்க வேண்டும்  என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.  அதன்பின்னர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற சிபிஐ, திங்களன்று(டிச.30) முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது.