tamilnadu

img

கல்வித் திட்டத்தில் மறு சிந்தனை தேவை: கி.வீரமணி

சென்னை,பிப்.7- தமிழ்நாட்டில் 100 விழுக் காடு இடைநிற்றல் என்ற அவ லம் தொடர்வதற்கு காரணம்  என்ன? என்பது அறிந்து கொள்வதுடன் கல்வித் திட்டம் குறித்து மறு சிந்தனை  தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியிருக்கிறார்.  இதுகுறித்து அவர் விடுத்  துள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில் 9, 10 ஆம்  வகுப்பு மாணவர்கள் இடைநிற்றல் 100 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்  துள்ளார். பள்ளியில் மாண வர்களின் இடைநிற்றலைத் தடுக்க மாநில அரசு இதற்கு  முன் பல்வேறு நடவடிக்கை களை எடுத்திருந்தது. 8 ஆம்  வகுப்பு வரை மாணவர்களை தோல்வியடையச் செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

பள்ளியில் மாணவர்க ளின் இடைநிற்றல் தொடர் பாக மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் பி.பி.சவுத்ரி, சுதாகர் துகாரா ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர், “தமிழ்நாட்டில் 9,10ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100 சதவிகிதம் அதிகரித்தி ருப்பதையும் 2015-2016 ஆம்  ஆண்டில் 8 சதவீதமாக இருந்த நிலையில் 2017-18 ஆம் ஆண்டில் 16.2 சதவீத மாக அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.  வெறும் மனப்பாடம் -  அதன் அடிப்படையில் தேர்வு கள் - அதில் பெறும் மதிப் பெண்கள்தான் தகுதி, திற மையின் அளவுகோல் என்ற அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.  கல்வி பயில்வது என்ப தில் மாணவர்கள் மத்தியில்  ஓர் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்; 5, 8, 10, 11, 12 என்று வரிசையாக பொதுத் தேர்வுகள் அணிவகுத்து நின்றதால் ஏற்பட்ட கடும் விளைவுதான் இந்த மிகப்  பெரிய அளவிலான இடை நிற்றலுக்கு முக்கிய காரணம்.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு களில் பொதுத் தேர்வு ரத்து  செய்யப்பட்டுள்ளது என்றா லும், 10, 11, 12 ஆகிய வகுப்பு களுக்குத் தொடர்ந்து மூன்று  ஆண்டுகள் பொதுத் தேர்வு  என்பதுபற்றியும் மறுபரி சீலனை அவசியம் தேவை.  புதிய கல்விக் கொள்கை யின்படி கல்லூரியில் சேர்வ தற்கே நுழைவுத் தேர்வு என்பது என்ற தாக்குதலும் கைவிடப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தி ருக்கிறார்.