வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

நாகை கொள்ளிடம் அருகே  பெண்ணுக்கு கொரோனா தொற்று 

சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கொடியம்பாளையம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின்மனைவி சூரியகலா(45). இவரின் மகளுக்கு பிரசவத்திற்காகதனியார் மருத்துவமனைக்கு சென்ற போது கொரோனா பரிசோதனை செய்து வந்தால் தான் அனுமதிக்கப்படும் என்றுதனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதைத்தொடர்ந்து தாய், மகள் இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் கொரோனா பரிசோதனைக்குச் சென்றனர். இதில் சூரியகலாவுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிரசவ வேதனையில் உள்ள சூரியகலாவின் மகளுக்கு கொரோனா இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர்பபிதா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சூரியகலாவை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கொடியம்பாளையம் தீவுகிராமத்திற்கு மருத்துவக் குழுவினர் சென்று, 18 நாட்கள் அக்கிராமத்தை தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  

;