tamilnadu

img

ஆம்பூர் மற்றும் காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் கூட்டு பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை கைது செய்ய கோரிக்கை

சென்னை, ஆக. 21 - மனவளர்ச்சி குன்றிய பெண்ணை  கூட்டு பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வேண்டும்  என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்  திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் ஆகிய அமைப்புகள் வலி யுறுத்தி உள்ளன. இது தொடர்பாக மாதர் சங்க மத்திய  சென்னை மாவட்டச் செயலாளர் வி.தன லட்சுமி, மாற்றுத்திறனாளிகள் சங்க மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி ஆகியோர் காவல்துறை கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவல கத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்ப தாவது: சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் தெரு வோர குடிசையில் தாய் மனவளர்ச்சி குன்றிய 22 வயது மகளுடன் வசித்து வருகி றார். கடந்த ஆக.13 அன்று இரவு குடிசை யில் தூங்கிக் கொண்டிருந்த அந்த தாய் மற்றும் இளம் பெண்ணை லிங்கன் மற்றும்  அவனது கூட்டாளிகள் சேர்ந்து தாக்கி யுள்ளனர். கத்தி முனையில் தாயின் கண் எதிரே மகளை பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்ததும் தாயும் மகளும் 4 மணி அளவில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்  அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 9 நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகள் லிங்கன் உள்ளிட்டோர் சுதந்திரமாக நடமாடுகின்றனர். எனவே, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், வழக்கு முடியும் வரை அந்த பெண்களுக்கு உரிய பாது காப்பு வழங்குவதோடு, உடனடியாக உயர்  மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அவர்களுக்கு, உரிய இழப்பீடு  பெற்று தர வேண்டும். தனிமையில் வாழும் அவர்களுக்கு  குடியிருக்க அரசு வீடு ஒதுக்க  வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.

ஒரகடம் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம், ஆக.21- ஒரகடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாண வர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக செப்.16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் பொன்னையா தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி நிலையத்தில் மோட்டார் வாகன மெக்கானிக், பிரிட்ஜ் மற்றும் ஏ.சி. டெக்னீசியன், எலக்ட்ரானிக்ஸ் மெக்கா னிக் மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர் ஆகிய  தொழிற் பிரிவுகள் உள்ளன. இரண்டு ஆண்டுகால பயிற்சிக்கு  பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், வெல்டர் பிரிவிற்கு ஓராண்டு பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. அரசு உதவித் தொகையாக மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாய், விலையில்லா மிதிவண்டி, மடிகணினி, இரண்டு செட்  சீருடைக்கான துணி, தையற்கூலி, இலவச புத்தகங்கள், இல வச சேப்டி ஷூ ஆகியன வழங்கப்படும். மேலும், விவரங்க ளுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தையும், 9144-29894560, 9841641033 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள லாம் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செல்போன் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

ஆம்பூர், ஆக. 21- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களிடம்  செல்போன் கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது. இதையடுத்து காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுஆம்பூர் அடுத்த வடகரை டாஸ்மாக் கடை அருகே செல்போன் கொள்ளையில் ஈடுபட முயன்ற கார்த்திக், வெங்கடேசன் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆம்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்போன் கொள்ளையில் ஈடுபட்டதும், அதை வாணியம்பாடி பகுதியை சேர்ந்த கோபி, கண்ணன் ஆகியோரிடம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கண்ணன், கோபி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அருகே சிறுமி திருமணம் நிறுத்தம்

கள்ளக்குறிச்சி, ஆக. 21- கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனுர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், சங்கராபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வெள்ளியன்று (ஆக. 21) திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதுபற்றி அறிந்த சங்கராபுரம் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் வடபொன்பரப்பி காவல் துறையினர் ரங்கப்பனூர் பகுதிக்கு சென்றனர். அங்கு சிறுமியின் பெற்றோரிடம், 18 வயது பூர்த்தியாகாத சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று கூறி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு, அவர்களிடம் திருமணத்தை நடத்தக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு சென்றனர்.

மரபணு மாற்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

சென்னை, ஆக.21- ஒரு வகையான அமிலக் குறைபாட்டால் கல்லீரல்  பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறு வனுக்கு கோவிட் தொற்று நோய் பரவலுக்கு இடையி லும் கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்து வமனை டாக்டர்கள் குழு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது உலகம் முழுவதும் இது போன்ற நோயால் 17  பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள் ளது. அதில் இது ஒன்று இந்தியாவில் இருந்து பதிவு  செய்யப்பட்டுள்ளது. குழந்தை பருவத்தில் கல்லீர லைப் பாதிக்கும் அரிய மரபணு கல்லீரல் நோய்களில்  இதுவும் ஒன்றாகும், மேலும் இது குழந்தை பருவத்தி லேயே கல்லீரல் செயலிழப்புக்கும் வழிவகுக்கிறது. இந்த நோய் மரபணு பிறழ்வால் ஏற்படுகிறது. இது போன்ற சிக்கலான நோய் காரணமாக அந்த சிறு வனை காப்பாற்ற அவனின் தாய் தனது கல்லீரலை  தானம் செய்ய முன் வந்தார். இந்த நிலையில், கோவிட் - 19 தொற்றுக்கு மத்தியி லும் டாக்டர்கள் ஜாய் வர்கீஸ், ரஜனிகாந்த் பச்சா, செல்வகுமார் மல்லீஸ்வரன் மற்றும் பெருமாள் கண்ணன் தலைமையிலான 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை 8 மணி  நேரம் வெற்றிகரமாக மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவன் தனது இயல்பு வாழ்க்கைக்கு  திரும்பி உள்ளான். டில்லி கணேஷ் என்னும் சிறுவனுக்கு 2 வயதாக  இருக்கும்போதே மஞ்சள் காமாலை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் விரிவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அத னைத் தொடர்ந்து அவனுக்கு மருந்துகள் வழங்கப்  பட்ட போதிலும், அவன் தொடர்ந்து மஞ்சள் காமாலை  நோயால் அவதிப்பட்டான். அது காலப்போக்கில் படிப்படியாக அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த  ஜூலை மாதம் அவன் மிகவும் ஆபத்தான நிலையில்  குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான். அறுவை சிகிச்சை முடிந்த 5 நாட்களுக்கு பின்னர் அவன் இயல்பு நிலைக்கு திரும்பி எப்போ தும்போல சாதாரண உணவை எடுக்கத் தொடங்கி யுள்ளான்.