திங்கள், ஜனவரி 25, 2021

tamilnadu

img

ஐஐடி நுழைவு வாயிலை திறக்க நடவடிக்கை

வாகை. சந்திரசேகருக்கு அமைச்சர் பதில்

சென்னை, ஜன. 9- சென்னை ஐஐடியில் மூடப்  பட்ட நுழைவாயிலை முதல்வரு டன் பேசி மத்திய அரசின் அனுமதி யுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்  படும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய வேளச்சேரி திமுக  உறுப்பினர் வாகை.சந்திரசேகர், 1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட  சென்னை ஐ.ஐ.டி-யில் பிரதான வாயிலை தவிர்த்து மூன்று நுழைவாயில்கள் இருந்தது. அதில் வேளச்சேரி மக்கள் பயன்படுத்தும் காந்தி சாலை நுழைவாயில் அடைக்  கப்பட்டிருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.  மேலும் அப்பகுதி ஆதி திராவி டர் மக்கள் வாழும் பகுதி என்பதால் அவர்கள் மிகுந்த வேதனைக் குள்ளாகிவருகிறார்கள். அந்த வாயிலை உடனடியாக திறக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்  டையன், உயர்கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து மத்திய அரசின்  உத்தரவை பெற்று நுழைவாயிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

;