ஈரோடு,ஜூன் 27- உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொய் புகார் அளித்த ஈரோடு பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாய சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் புதனன்று மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள விளை நிலத் தில் ஏற்படும் மின்காந்த அலை கள் குறித்து ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே மூணாம் பள்ளி கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதியன்று ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது எந்தவித இணைப்பும் இல்லாமல் குழல் விளக்கு எரிந் தது, எலக்ட்ரிக் டெஸ்ட்ரை உடம் பில் வைத்து பார்த்தபோது அவர் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் இந்த பிரச்சனை சம்பந்தமாக வழக்கு தொடுத்துள்ள உழவர்க ளுக்கு உதவும் விதமாக நடந்த சம்பவத்தை ஒரு உறுதிப்பத்திரம் மூலமாக அந்த வழக்கில் தாக்கல் செய்தார். இந்நிலையில், உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு மின் காந்த பாதிப்பு குறித்த ஆய்வறிக் கையை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மீது காழ்ப்புணர்ச்சியோடு ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் தவறான தகவலை கூறி பொய் புகார் அளித்துள்ளனர். இதில் நாடாளு மன்ற உறுப்பினர் குறிப்பிட்டது போல் உயர் மின்கோபுரத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர். இவ்வாறு, விவசாயிகளின் பாதிப்புகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும், ஏளனப்படுத்தும் விதமாகவும் பாஜகவினர் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ்த்தரமானதாகும். ஆகவே, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மீது பொய் புகார் அளித்தும், பொய் யான செய்தியை பத்திரிகையில் பேட்டி கொடுத்த ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவசுப் பிரமணியன் மற்றும் அவர்களு டன் வந்தவர்கள் மீதும் தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.