ஈரானில் இன்று காலை அணுமின் நிலையம் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாட்டின் புஷேர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புஷேர் பகுதியில் உள்ள அணு மின் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.