புதன், பிப்ரவரி 24, 2021

tamilnadu

img

தேச ஒற்றுமைக்காக பள்ளிவாசலில் தேசியக் கொடி

கடலூர், ஜன.27- நாடு முழுவதும் 71 ஆவது குடி யரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. கடலூர்  மஞ்சக்குப்பம், சாவடி, புதுநகர்,  முதுநகர் என பல்வேறு இடங்களி லும் உள்ள பள்ளிவாசல்களில் தேசிய கொடி ஏற்றி குடியரசு தின  விழா கொண்டாடப்பட்டது.  மஞ்சகுப்பம் பள்ளி வாசல் முத்தவல்லி ஆர்.அப்துல் சத்தார்,  கோண்டூர் சாவடி பள்ளி வாச லில் முத்தவல்லி அக்பர் அலி ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி னர். பிஷப் ஜே. பால்திருநாவுக் கரசு, குமார கிருஷ்ணன், பிரபு, முருகன், வினோத் குமார்,  நந்தகுமார், கோண்டூர் 12 ஆவது  வார்டு செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் என மத பாகுபாடு இல்லாமல் தேச  ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் அனைவரும் ஒருங்கி ணைந்து பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு கள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

;