சிஐடியு 14வது மாநில மாநாடு செப்.19-22 வரை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி மாநாட்டு வரவேற்புக்குழு சார்பில் பிரச்சார பாடல்கள் கொண்ட இசைதட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கவிஞர்கள் தணிக்கொடி , சி.எம். குமார் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பாளர் முனு.கோட்டீஸ்வரன் இசை அமைத்து ள்ளார். இந்த குறுதகட்டை சிஐடியு மாநிலத்தலைவர் அ. சவுந்தரராசன் வெளியிட மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் பெற்றுக் கொண்டார். மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, நிர்வாகிகள் கே.ஆறுமுக நயினார், எம். சந்திரன், கே.சி. கோபிக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ். கண்ணன், செயலாளர் இ. முத்துக்குமார், கவிஞர் சி.எம். குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.