ஒட்டாவா, ஜன.18- கனடாவில் குடியேற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி திட்டமிட்டுள்ளார். இதை உறுதி செய்யும் வகையில் அவரது மனைவி மேகன் மெர்கல் வெள்ளியன்று கனடா சென்றார். பிரிட்டிஷ் பட்டத்து இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை மேகன் மெர்கலை திருமணம் செய்து கொண்டார். கருப்பின தாய், வெள்ளையின தந்தைக்கு பிறந்த மேக னுக்கு அரச குடும்பத்தினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரியும் மேகன் மெர்கலும் அண்மையில் அறிவித்தனர். இருவரும் கனடாவில் குடியேற திட்டமிட்டிருப்பதாகத் தெரி கிறது.