உலகம் முழுக்க இன்று நாம் கேட்கும் ஒரே வார்த்தை, கொரோனா! கைகளை கழுவுங்கள். தனித்திருங்கள் என பலவித அறிவுரைகள். அன்றாட வாழ்வு முடக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது. உயிர்பலி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வீடுமின்றி வேலையுமின்றி இருக்கும் மக்கள் சாலைகளில் இறங்கி நடக்கிறார்கள். கண்முன்னே நாட்டின் பெரும்பகுதி நாதியற்று நடந்து செல்வதை பார்க்கிறோம். மக்களின் வாழ்க்கைகள் பாதிப்படைந்த சூழலில் மக்களுக்கான அரசுகளாக பதவியேறியவை செய்யும் காரியங்களை உலகமே பார்த்துக் கொண்டி ருக்கிறது. பல நாடுகளின் அரசுகள் தங்கள் நாட்டில் கொரோனா தொற்று குறைவாக இருப்பதாக குறைந்த பரிசோதனைகளை மட்டும் செய்து ‘சாதித்துக்’ கொண்டிருக்கிறது.
மனிதப் பரிணாமத்தின் முக்கியமான தொரு கட்டத்தில் இருக்கிறோம்!
போர், வறுமை, ஒடுக்குமுறை, கொடுமை, சுரண்டல், கொலை, வன்புணர்வு என அச்சுறுத்தும் விஷயங்கள் பலவற்றை கண்டும் காணாமல் அவரவர் வாழ்க்கையைத் தொடர்ந்தோம். அவை வடிவம் மாற்றி கொரோனா பாதிப்பிலும் இன்று இடம்பிடிப்பதை பார்த்து செய்வதறியாமல் நிற்கிறோம். கொரோனா வழி வரும் அந்த பாதிப்புகள் நேரடியாக தாக்குகின்றன. மரபணுவை மட்டுமே கொண்டுள்ள கொரோனா வைரஸ்சுக்கு குறிப்பிட்ட நாட்டின் அடையாளம் கொடுக்கப்படுகிறது. கொரோனா வைரஸ்ஸின் மதம் என்னவென சொல்லப்படுகிறது. தேசப்பற்று என்கிற பெயரில் கொரோனாவை எதிர்க்க பல பைத்தியக் காரத்தனங்களைச் செய்ய வைக்கிறது.
எவற்றையெல்லாம் புறக்கணித்தோமோ அவையே நம்மை காக்க வருகிறது. யாரையெல்லாம் தூர வைத்தோமோ அவரெல்லாம் நமக்கு அவசியம் என்ற உண்மையை அடைந்திருக்கிறோம். எவரை யெல்லாம் நம்பினோமோ அவரெல்லாம் தொலைக் காட்சிகளில் தோன்றி அறிவிப்புகளை மட்டும் செய்து மறைந்து விடுகின்றனர்.
உலகில் இதற்கு முன் பெருமளவுக்கான மக்கள் ஒன்று சேர்ந்த நிகழ்வுகளென பார்த்தால் உலகப் போர்கள் என சொல்லலாம். போர்களில் நேர்ந்த ஒன்றுபடலுக்கும் இன்று மக்கள் ஒன்றுபடுவதற்கும் முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன. போர்க ளில் மக்கள் தங்களின் நாடுகள் என்கிற அடையா ளத்தின் கீழ் ஒன்று திரண்டிருப்பார்கள். பிற நாட்டின் மீதான வெறுப்புக்கு கீழ் ஒன்று திரண்டிருப்பார்கள். ஆனால் இப்போதைய சூழல் முற்றிலும் வேறு. முதன் முதலாக மக்கள் உயிரச்சத்தாலும் பிறர் மீதான அக்கறையினாலும் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
உலகத்தை கொரோனா தலைகீழாக்கிக் கொண்டி ருக்கிறது. கொரானா பாதிப்பு உலகுக்கு அறிமுகமான திலிருந்து மக்களுக்குள் கட்டமைக்கப்பட்டிருந்த நம்பிக்கைகள் பல அடித்தளம் காணாது சரிந்து கொண்டிருக்கின்றன. கொரோனா முதன்முதலாக அப்படி தலைகீழாக்கியது எதைத் தெரியுமா?
சீன நாட்டைப் பற்றி நாம் கொண்டிருந்த பிம்பத்தை! சீனாவைப் பற்றி நாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தோம்; அல்லது என்ன சொல்லித் தரப்பட்டிருக்கிறது? சீனா ஒரு சர்வாதிகார நாடு! மக்களை கடுமையாக கொடுமைப்படுத்துபவர்கள்! எந்த உரிமை யையும் மக்களுக்கு கொடுக்காத அரசை கொண்ட நாடு! சீனாவைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணங்களுக்கு அடிப்படையாக சில நம்பிக்கை கள் உண்டு.
சீனா அமெரிக்காவுக்கு எதிரி. அமெரிக்கா போற்றும் சுதந்திர வாழ்க்கைக்கும் ஜனநாய கத்துக்கும் சீனா எதிரி. ஐரோப்பியர்கள் அளவுக்கு அறிவு இல்லாத மடையர்கள் சீனர்கள் என்ற நம்பிக்கைகள்! இந்த கருத்திலிருந்துதான் நமது எளிய மக்க ளுக்கான நம்பிக்கைகள் பல உருவாக்கப் பட்டிருக்கின்றன.
சப்பை மூக்கு கொண்டவர்கள். குட்டை மனிதர்கள். கண்டதையும் கொன்று சாப்பிடும் அருவருப்பான உணவு வழக்கம் கொண்டவர்கள் என்ற நம்பிக்கைகள்! இந்த மூன்றுவித கருத்துகளும் சமூகத்தின் மூன்று நிலைகளில் இருக்கின்றன. முதல் நிலை அரசியல் நிலை. இரண்டாம் நிலை, மத்தியத் தர வர்க்கத்து நிலை. மூன்றாம் நிலை எளிய மக்களின் நிலை. மூன்று நிலைகளிலுமே சீனாவைப் பற்றி மோசமான நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் ஒன்று இருக்கிறது.
சீனா ஒரு கம்யூனிச நாடு!
கம்யூனிசம் அமெரிக்காவுக்குப் பிடிக்காத சித்தாந்தம். எல்லாமும் எல்லாருக்கும் என போதிக்கும் சித்தாந்தம். அவனவனுக்கு கிடைத்ததை அடித்துப் பிடுங்கி வாழ் என்பது அமெரிக்காவின் சித்தாந்தம். உலகம் முழுக்க இருக்கும் மக்களிட மிருந்து அடித்துப் பிடுங்கி வாழும் அமெரிக்காவின் வல்லரசு வாழ்க்கைக்கு சீனா கொண்டிருக்கும் கம்யூனிச சித்தாந்தம் நிச்சயமாக எதிர்தான்.
அமெரிக்க வாழ்க்கையை போதித்து அமெரிக்கப் பொருளாதாரத்தை பின்பற்றும் அரசுகளும் அதன் மக்களும் சீனாவை எதிர்க்கும் வரைதான் அமெரிக்காவால் வல்லரசாக நீடிக்க முடியும். ஆதலால் சீனாவைப் பற்றிய அவதூறுகளும் மோசமான நம்பிக்கைகளும் மக்கள் மத்தியில் நிலவ வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு உண்டு.
உதாரணத்துக்கு, அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கொரோனாவை ‘சீன வைரஸ்’ என சொல்லி குறிப்பிடுகிறார். ஒரு நாட்டின் பெயரை வைரஸ்சுக்கு வைத்து கூப்பிடுவது சரியா என ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்க, டொனால்டு டிரம்ப் தான் கூறிய பதிலில் உறுதியாக நிற்கிறார். டொனால்டு டிரம்ப் வார்த்தையை கேள்விக்கு உள்ளாக்கும் பத்திரிகையாளர் அமெரிக்காவிலேயே இருக்கிறார். ஆனால் அமெரிக்காவின் வார்த்தையை பிரதிபலிக்கும் செய்திகள் உலகெங்கும் இன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
கொரொனா தொற்று தொடங்கிய இடம் சீனாவின் வுஹான் நகரம். கடந்த நவம்பர் தொடங்கி, டிசம்பரில் பரவி, ஜனவரியில் அதிகமாகி, உலகுக்கும் பரவத் தொடங்கியது கொரோனா.
ஜனவரி மாதத்திலேயே கொரோனா பற்றிய முழுமையான ஆராய்ச்சியை நடத்தி, வைரஸ்ஸின் மரபணுவை கண்டுபிடித்தது சீனா. அதை தன்னோடு மட்டுமென வைத்துக் கொள்ளாமல் உலகுக்கு தெரிய பிரசுரித்தது. எந்த நாடும் கொரோனாவின் மரபணுவை ஆராய்ந்து தன் நாட்டின் சூழலுக்கு ஏற்ப அவற்றின் தன்மைகளை முன் யூகித்து மருத்துவ தயாரிப்புகளை செய்து கொள்ள உதவக் கூடிய முன்னெடுப்பு. ஆனாலும் அதை எந்த நாடும் பொருட்படுத்தவில்லை. உலக சுகாதார நிறுவனம் மட்டும் உலக நாடுகள் எல்லாவற்றையும் கொரோனா பாதிப்புக்கு தயாராக அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. அமெரிக்கா கூட பொருட்படுத்தவில்லை. அமெரிக்காவின் டிரம்ப், இந்தியாவுக்கு வந்து புது ஒப்பந்தங்கள் போடும் மும்முரத்தில் இருந்தது. இந்தியாவோ அமெரிக்க அதிபரை வரவேற்க சுவர் கட்டிக் கொண்டிருந்தது. குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தது.
இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி என உலக நாடுகள் பெரும்பான்மையானவை பெரும் அலட்சியத்தில் இருந்தன. மக்களுக்கு ஏற்படப்போ கும் இடரை உணர்ந்து தயாரிப்பு நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் வெறும் அரசியலை மட்டும் செய்து கொண்டிருந்தன.
அவை எல்லாமும் குறை கூறிக் கொண்டிருந்த கம்யூனிச சீனா, மக்களுக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பால் நோய் தொற்று சீனாவில் அதிகமாகிக் கொண்டி ருந்தது. பலி எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டி ருந்தது. உலக நாடுகள் எல்லாமும் ஏளனம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தன. அமெரிக்க டிரம்ப்பை போல் ‘சீன வைரஸ்’ என்றும் ‘கண்டதை சாப்பிடும் சீனாக்காரன்’ எனவும் நக்கலடித்துக் கொண்டிருந்தோம். கம்யூனிச சீன அரசோ நாம் கண்ட அரசுகள் எதையும் காட்டிலும் கற்பனைக்கெட்டாத வேகத்துடனும் தயாரிப்பு டனும் மக்கள்நலனுக்கென துணை நின்று கொண்டி ருந்தது. அமெரிக்கா முதலிய உலக நாடுகள் சீனாவை பற்றியும் கம்யூனிசத்தை பற்றியும் பரப்பும் பொய் பிரச்சாரத்தை எதிர்த்து உலக மக்களும் உலக ஊடகங்களும் தங்களை மறந்து வியந்து சீனாவை பார்க்கும் சமயம் வந்தது.
சீனாவைப் பற்றி உலக நாடுகளும் ஊடகங்க ளும் பரப்பிய பொய் பிரச்சாரம் சில நாட்களிலேயே தூள் தூளானது. மறுபக்கத்தில் இன்னொரு விஷயமும் நடந்து கொண்டிருந்தது.
உலகின் வல்லரசு நாடாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா. அந்த நாடு முன்னி றுத்தும் தத்துவம் முதலாளித்துவம். மக்களை பற்றியும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழி லாளர்களை பற்றியும் அரசுக்கு எந்த கவலையும் கிடையாது. அமெரிக்காவில் இருக்கும் முதலாளிகள், நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்களை பற்றி கவ லைப்பட மட்டுமே அரசு என செயல்படும் நாடு. தனி நபரின் வேலைக்கான உத்தரவாதம், வரு மானத்துக்கான உத்தரவாதம், வாழ்க்கைக்கான உறுதி எதுவும் அமெரிக்க அரசு மக்களுக்கு கொடுப்பதில்லை. முதலாளிகளின் பணத்துக்கும் நிறுவனங்களின் முதலீடுக்கு மட்டுமே உறுதி யளிக்கும். நிறுவனங்களுக்கும் முதலாளிகளுக்கும் உழைத்துக் கொட்ட வேண்டுமென்பதால் போனால் போகிறதென மக்களுக்கு சில சலுகைகள் மட்டும் உண்டு. மற்றபடி முதலாளிக்கும் பணக்காரனுக்கும் ஏதேனும் பிரச்சினை என்றால் மட்டுமே அமெரிக்க அரசு பதட்டம் கொள்ளும். இப்போது கூட கொரோனா பாதிப்பால், சாகவிருக்கும் அமெரிக்கர்களுக்கு என இரண்டு லட்சம் பிரேதப் பைகளை தயாரிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. அந்த அமெரிக்கர்களை எப்படி காப்பதென்ற யோசனை கொஞ்சம் கூட டிரம்ப் அரசுக்கு இல்லை.
அத்தகைய அமெரிக்க அரசின் காலுக்கு அருகே ஒரு குட்டி நாடு இருக்கிறது. கியூபா! மிகவும் சிறிய நாடு. அமெரிக்காவுக்கு பிடிக்காத இன்னொரு நாடு. அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை என்றாலே அது நல்ல நாடாகத்தான் இருக்கும். அந்த வகையில் கியூபாவும் சரியான நாடுதான். ஏன் அமெரிக்காவுக்கு கியூபாவை பிடிக்காது? கம்யூனிசம்தான்.
கியூபா கம்யூனிசத்தை பின்பற்றும் நாடு. அமெரிக்கா சொல்லும் முதலாளித்துவத்தை எதிர்க்கும் நாடு. முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யூனிச நாட்டில் என்ன மாதிரியான வாழ்க்கை இருக்கிறதென தெரியுமா? உதாரணமாக ஒன்று.
கியூபாவில் மருத்துவமும் கல்வியும் இலவசம். மருத்துவம் கியூபாவின் அரசிடம் இருக்கிறது. தனியாரிடம் இல்லை. பேதமே இல்லாமல் எல்லா மக்களுக்கும் கியூபாவில் மருத்துவம் இலவசம். அமெரிக்காவிலோ முதலாளித்துவத்தை பின்பற்றும் பிற நாடுகளிலோ அப்படி இல்லை. மருத்துவம் என்றாலே பெரும் செலவு என்கிற சூழல்தான் முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும்.
கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்களின் பார்வையை குவித்தது கியூபா நாட்டில்தான்.
கொரோனா சீனா தொடங்கி உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்ததும் கியூபா தன் நாட்டின் மருத்துவர்க ளை உலக நாடுகள் அனைத்துக்கும் அனுப்பியது. முக்கியமான இன்னொரு விஷயம். மருத்துவத்தில் முன்னிலையில் இருக்கும் நாடும் கியூபாதான். ஏற்கனவே பல ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க ஏழை நாடுகளில் இலவசமாக 29000 கியூப மருத்துவப் பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கி றார்கள். கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்நிலை யில் எந்த பிரதிபலனும் கேட்காமல் இத்தாலி உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் எந்த பணமுமின்றி இலவசமாக மருத்துவ உதவி செய்யவென 593 மருத்துவர்கள் கொண்ட குழுவை கியூபா அனுப்பி வைத்திருக்கிறது.
கியூப மருத்துவர்கள் உலக நாடுகள் அனைத்து க்கும் இன்று சென்று உதவிக் கொண்டிருக்கிறார்கள்.
சீனாவும் கியூபாவும் கொரோனாவை எதிர்த்து வென்று கொண்டிருக்கும் விதத்தை நேரடியாக இன்று மக்கள் கண்டு கொண்டிருக்கிறார்கள். பிற அரசு களை காட்டிலும் கம்யூனிச அரசுகள் எந்தளவுக்கு மக்களுக்கான அரசுகளாக இருக்கிறார்கள் என்பதை உலக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். முத லாளித்துவத்தை காட்டிலும் கம்யூனிச சித்தாந்தமே மக்களுக்கானது என்பதை கொரோனா வைரஸ் உலகத்துக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.
எல்லாமுமே சில நாட்கள் வரைதான். அமெரிக்கா வாலும் அமெரிக்காவை சார்ந்த நாடுகளின் ஊடகங்க ளாலும் கம்யூனிசமும் சீனாவும் மக்களால் கொண்டா டப்படுவதை காண முடியவில்லை. மார்ச் மாதத்திலி ருந்தே சீனாவை பற்றி பல கதைகளை சொல்லத் தொடங்கிவிட்டன. கொரோனா பாதித்த மக்களை சீனா கொன்று விட்டது என்றெல்லாம் புது புதுக் கதை களை சொல்லத் தொடங்கிவிட்டன. கம்யூனிசத்தை பற்றிய பொய்ப் பிரச்சாரம் மீண்டும் முடுக்கிவிடப் பட்டிருக்கிறது. இத்தகைய பிரச்சாரங்கள் வரலாறு முழுக்க கம்யூனிசத்தை குறித்து முன் வைக்கப்பட்ட வைதான். அவற்றை தாண்டி வரலாறு கம்யூனி சத்தை வெல்ல வைத்தே வந்திருக்கிறது.
சில நாட்களுக்கு முன் கூட ஒரு செய்தி சீனாவைப் பற்றி வந்தது. சீனாவிலுள்ள செல்போன் நிறுவனங்களில் மொத்தமாக 2 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் கடந்த மூன்று மாதங்களில் சேவையை தொடரவில்லை என. அதாவது ரீசார்ஜ் செய்யவில்லை. ஆகவே அவர்களுக்கு என்னவா னது என யாருக்கும் தெரியவில்லை. இதைப் பற்றிய பல விவாதங்கள் ஆர்வமாக சமூக தளங்களில் முன்னெடுக்கப்பட்டன. அமெரிக்க ஊடகங்கள் நிறைய கதைகளுடன் செய்திகளை வெளியிட்டன. நம்மூர் ஊடகங்கள் மேலும் மசாலா தூவி அச்செய்தி களை படுசுவாரஸ்ய திரைக்கதைகளுடன் வெளி யிட்டன.
மொத்த செய்திகளின் அடிப்படையும் ஒன்றாக இருந்தது. அதாவது கொரோனா பாதிப்பு சீனாவில் மிக அதிகமாக இருந்ததாகவும் சீன அரசு அதை மறைத்து குறைவான எண்ணிக்கையே கொடுத்துக் கொண்டிருந்ததாகவும் சொன்ன செய்தி, ஒரு மிகப்பெரிய திருப்பத்தையும் முடிவில் வைத்தது. கணக்கில் வராத இந்த 2 கோடி மொபைல் வாடிக்கை யாளர்கள் எண்ணிக்கை, கொரோனா பாதிப்பை உலகத்திடமிருந்து மறைப்பதற்காக சீன அரசு கொன்ற மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையாம்.
எப்படி கதை?
‘சதக்’ என குத்தினான். ‘அய்யோ’, ‘அய்யோ’ என கத்தினான் பாணி கதைகள்!
கூடிய விரைவில் அமெரிக்காவில் வருகிறதோ இல்லையோ இந்தியாவிலும் தமிழகத்திலும் சீன அரசை சைக்கோ அரசாக சித்தரிக்கும் படங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உண்மையில் 2 கோடி மக்கள் பின் என்னதான் ஆனார்கள் சீனாவில்?
ஹாலிவுட் அளவுக்கு அதிரடியாக யோசிக்காமல் எளிமையாக யோசித்தாலே விடை கிடைத்துவிடும். லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் வீட்டிலிருந்து பணி புரியும் காரணத்தாலும் இடம்பெயர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இடம்பெயர வேண்டிய காரணம் இல்லாததாலும் மொபைல் சேவையை தொடரவில்லை. அவ்வளவுதான். China Mobile Ltd நிறுவனமே இதைத்தான் சொல்லியிருக்கிறது.
ஆனாலும் சீனாவை படுபயங்கரமான நாடாக சித்தரிப்பதில் ஊடகங்களுக்கு இருக்கும் ஆர்வம் தணிந்ததே இல்லை.
‘கொரோனாவை கண்டுபிடித்த மருத்துவரை கொன்றது சீனா’, ‘முதல் கொரோனா நோயாளியை ஒளித்து வைத்தது சீனா’ என வகைவகையாக பல செய்திகளை தினுசு தினுசாக கண்டுபிடிக்கிறார்கள். சீனாவுக்கு எதிராக இருந்தால் போதும், உண்மை களை பற்றிய கவலை ஏதுமின்றி துள்ளிக் குதித்து செய்திகளாக்கி விடுகிறார்கள்.
சீனா மீது அப்படியென்ன கோபம்? சீனாவின் அரசு உண்மையிலேயே கொடுமையான அரசா? இரண்டு கேள்விகளுக்குமான பதிலை நேரடி யாக கூறிவிட முடியுமெனினும் நடந்த விஷயங்களை தெரிந்து கொண்டால் பதில் ஆழமாக மனதில் பதியும்.
பியுஷ் ஷர்மா, இந்தியாவை சேர்ந்தவர். சீனாவில் சோங்கிங்கில் வேலை பார்ப்பவர். மருத்துவர். கொரோனா பாதிப்பு சீனாவை தாக்கிய போது மருத்துவ மனையில் இருந்தார். வசந்தகால விடுமுறைக்கு இந்தியா செல்ல தயாராகிக் கொண்டிருந்த ஜனவரி மாத இறுதியில், இவர் இருந்த பகுதியில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது. விடுமுறை எடுக்காமல் வேலை பார்த்தார். சீன மொழி தெரியாத மக்களுக்கு தொலைபேசியின் வழி மருத்துவ மற்றும் மனநல ஆலோசனைகளை கொடுப்பது இவரின் வேலையாக இருந்தது.
நமக்கெல்லாம் கொரோனா என்றால் என்ன வென தெரியும். கொரோனா என்பது ஆபத்தான வைரஸ் என்கிற அளவுக்கு நாம் தெரிந்து வைத்தி ருக்கிறோம். கொரோனாவின் பாதிப்பு எந்தளவில் இருக்கும் என்பது உலகளவில் தெரிந்த பிறகும் நமக்கு வாய்த்த அரசுகள் கைதட்டவும் விளக்கேற்ற வும் சொல்லிக் கொண்டிருக்கும் சூழலில், முதன் முதலாக கொரோனாவை எதிர்கொண்ட சீன அரசு என்ன செய்தது?
விளக்குகள் ஏற்றி கொரோனாவை விரட்டும் தேசத்தை சேர்ந்த அந்த மருத்துவர், சீனா கொரோனா கையாண்ட விதத்தை பற்றி என்ன சொல்கிறார்?
“மனித வளத்தை பொறுத்தவரை குறையே இருக்கவில்லை. போர்க்களத்தில் வேலை பார்ப்பதை போல் அனைவரும் வேலை பார்த்தனர். எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. விலை உயர்ந்த ஆடைகளை போட வேண்டியிருந்ததால் அதிகமாக கழிவறைக்கு செல்ல முடியாது. குழந்தைகளுக்கு போடும் டயாபர் ஆடையை போட்டுக் கொண்டோம். இந்தியாவிலிருந்து ரொம்பவே வித்தியாசமானது இங்கு இருக்கும் சூழல். இந்தியாவில் நாஷிக், புனே, ராஜஸ்தான் என வெவ்வேறு இடங்களில் கொரோனா பரவும் இடங்கள் இருக்கலாம். ஆனால் இங்கு வேறு விதம். இங்கு ஒரே இடம்தான். ஹுபே மாகாணத்தின் வுஹான் நகரம். நாட்டின் மொத்த வளங்களும் உதவிகளும் ஹுபே மாகா ணத்துக்கு செலுத்தப்பட்டன. இந்தியாவில் பல முனைகளிலிருந்து போர் தொடுப்பதற்கு இது சமம். நம் அனைவருக்கும் முன்னால் அற்புதமான உதார ணம் இருக்கிறது. சீனா கொரானாவை கட்டுப்படுத்திய விதத்தை அப்படியே காப்பியடித்தால் கூட போதும்.
டிசம்பர் இறுதியிலேயே கொரோனா வைரஸ்ஸை சீனா கண்டுபிடித்துவிட்டது. உலகத்துக்கும் வைரஸ்ஸால் பாதிப்பு ஏற்படும் என்பதால் உலக சுகாதார நிறுவனத்துக்கும் உடனே தகவலை தெரிவித்தது. ஜனவரியின் பாதியின்போது வைரஸ்ஸை கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகளை தன் நாட்டில் சீன அரசு எடுத்தது. பெருமளவு எண்ணிக்கையில் முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு மக்களை சென்றடைந்தன. சூழலின் தீவிரம் புரியாமல் இயல்பாக வெளியே சுற்றும் மக்களும் இருந்தனர். அவர்களை சீன அரசு காவலர்களை கொண்டு லத்திகளால் அடிக்க வில்லை. நூதன முறையை கையாண்டது. ட்ரோன் எனப்படும் பறக்கும் இயந்திரத்தை கொண்டு மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து முகக்கவசங்கள் அணியாதவர்களை அணியும்படி அறிவித்தது. இத்தனை நவீன வழிமுறைகளை பொதுவாக நகரங்களில் செய்வார்கள். ஏனெனில் நகரங்கள் மட்டுமே உலக கவனம் பெறும். சீன அரசுக்கு உலக கவனத்தைவிட மக்கள் நலம் முக்கியமாக இருந்த தால், இத்தகைய பறக்கும் இயந்திரங்கள் சீன கிராமங்க ளில் கூட மக்களை கண்காணித்து அறிவிப்புகளை வெளியிட்டன.
உணவுக்கு வழியேற்படுத்தாமல் ஊரடங்கு அறிவித்த பிறகு உணவு தேடி வரும் மக்களை ரோட்டில் விட்டு அடிப்பது போலல்ல சீனா அரசின் அறிவிப்பு. மக்களுக்கு தேவையான உணவுக்கான வழிமுறை களை செய்த பிறகே ஊரடங்கு அறிவிப்பு வெளி யானது.
உணவுகளுக்கான போக்குவரத்தை வடிவ மைத்து வைத்திருந்தது சீன அரசு. காவல்துறை யெல்லாம் இல்லாமல் சமூகக் குழுக்களை சீன அரசு ஒருங்கிணைத்தது. மக்களுக்கான உணவு களை வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் வழிமுறை களை மேற்கொண்டது. மேலும் வீட்டிலிருந்து மக்கள் விரும்பும் உணவை ஆர்டர் செய்து பெரும் வாய்ப்பையும் அனுமதித்தது. வெவ்வேறு வாகனங்க ளிலும் தன்னார்வலர்களின் உதவியையும் கொண்டு மக்களுக்கான உணவை வீடு கொண்டு சேர்த்தது சீன அரசு. பிற நோய்களுக்கான மருந்துகளும் சீன மக்களின் வீடு தேடி அடைந்தது.
ஏப்ரல் 8ம் தேதி, 76 நாட்கள் முடிந்திருந்தன. ஊரடங்கு உத்தரவை சீன அரசு திரும்பப் பெற்றது. ஊரடங்கு முடியும்போதும் மக்களுக்கான நம்பிக்கை யை கொண்டாடும் வகையில் நகரம் முழுக்க உற்சா கம் தரும் அலங்காரத்துடனும் கொண்டாட்டத்துடனும் ஊரடங்கை முடித்தது சீன அரசு.
ஏன் இந்த கொண்டாட்டம்?
நம்மூர் விளக்கு ஏற்றல், கை தட்டுதல் போன்ற வைதானே இவையும் என கேட்கலாம். முக்கியமான வித்தியாசம் ஒன்றும் காரணம் ஒன்றும் இருக்கிறது.
கொண்டாட்டத்துக்கான காரணம் இதுதான்.
கடந்த மாதத்திலேயே, அதாவது மார்ச் 18ம் தேதியே வுகான் நகரத்தில் கொரோனா தொற்றிய புது நோயாளிகள் இல்லை என்கிற கட்டத்தை வெற்றி கரமாக கொண்டு வந்தது சீன அரசு. அதாவது ஊரடங்கு அறிவித்த இரண்டு மாதங்களுக்குள்.
கொண்டாட்டம் கொண்டிருந்த வித்தியாசம் இதுதான்.
கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற வென மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்க ளையும் செய்ததோடு மட்டுமல்லாமல், மக்களை முதல் வரிசையில் நின்று காப்பாற்றும் மருத்துவர்க ளுக்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து கொரோனா பேரிடரை சீன அரசு அப்புறப்படுத்தியது. மருத்துவர்க ளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதையும் கொடுக்காமல், வெறும் ரெயின் கோட்டை மட்டும் மாட்டிவிட்டு வேலை பார்க்க நிர்ப்பந்தித்தும் திடுதிப்பென லாக்டவுன் அறிவித்து மக்களை அதிரிபதிரி யாக தெருவில் ஓட விட்டும், அலைக்கழிப்புலேயே பலரின் உயிர் போகச் செய்தும் விட்டு, திரையில் தோன்றி கைதட்டவோ விளக்கேற்றவோ சீன ஜனாதிபதி சொல்லவில்லை.
இரண்டு மாதங்களிலேயே புது நோயாளிகள் இல்லையென்ற நிலையை எட்டியும் பொறுமையாக இருந்து இரண்டு வாரங்கள் மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திய பிறகே சீன அரசு ஊரடங்கை விலக்கியிருக்கிறது.
ஓர் அரசு தன் மக்களை காப்பாற்றுவதெல்லாம் என்ன பெரிய சாதனையா?
பல நாடுகளின் அரசுகள் தங்கள் மக்களை சாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில், தன் மக்களை அரசு காப்பாற்றுவது நிச்சயமாக சாதனை தான் என்கிற சூழலிலேயே நாம் இருக்கிறோம். அது மட்டுமல்லாமல், சீனாவை பிரமிப்பதற்கான காரணங்கள் இன்னும் பல இருக்கின்றன.
சொந்த மக்களை காப்பாற்றுவதையும் தாண்டி உலக மக்களுக்கான நலனையும் பேணும் கட்டத்துக்கு நகர்ந்தது சீன அரசு.
செர்பியா, ஐரோப்பாவில் இருக்கும் நாடு. அங்கும் கொரொனா பாதிப்பு அதிகம். அந்த நாட்டுடனான வர்த்தக உறவில் இருக்கும் எந்த நாடும் உதவ வர வில்லை. நாட்டின் வளங்களை சுரண்ட ஆவலுடன் இருந்த ஐரோப்பிய நாடுகள், உதவி என வந்ததும் செர்பியாவை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அநாதரவாக தன் நாடும் மக்களும் விடப்பட்டி ருக்கும் ஆதங்கத்துடன் ஊடகங்களை சந்தித்த செர்பிய ஜனாதிபதி இப்படி பேசினார்:
“சர்வதேச ஒற்றுமை என சொல்லப்படுவ தெல்லாம் உண்மையில் கிடையாது. ஐரோப்பிய நாடு களின் ஒற்றுமை என்றும் ஒன்று கிடையாது. அதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான். இன்று ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். எங்களுக்கு உதவி கிடைக்கும் என நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டிருக்கும் நாடு ஒன்றுதான். சீனா! நாங்கள் சீனாவிடம் எல்லாவற்றையும் கேட்டிருக்கிறோம். மருத்துவர்களை கூட கேட்டிருக்கிறோம்.”
அவ்வளவுதான்.
சீனாவிலிருந்து உதவிகளோடு விமானங்கள் செர்பியாவுக்கு வந்து இறங்கின.
செர்பியா மட்டுமென இல்லை. ஆப்பிரிக்க நாடுகள், கம்போடியா, இராக், ஈரான், பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், ஐரோப்பிய நாடுகள் என தொடர்ந்து பல நாடுகளுக்கு சீனாவின் உபகரணங்களில் தொடங்கி மருத்துவ உதவி வரை பறந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி, சீன வைரஸ் என பெயர் சூட்டி மகிழ்ந்தாரே அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரின் நாட்டுக்கே 30 லட்சம் முகக்கவசங்களை சீனா அனுப்பியிருக்கிறது. இந்தியாவுக்கும் மருத்துவ உதவி வந்து சேர்ந்திருக்கிறது.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட இன்னா செய்தாரை சீனா ஒறுத்திருக்கிறது. காரணம் சீனாவின் வரலாற்றிலும் அரசியலிலும் கலந்திருக்கும் கம்யூனி சம். நட்பு நாடு, எதிரி நாடு என்கிற பேதமின்றி உலக மக்கள் அனைவருக்கும் நலன் சேர வேண்டும் என விரும்பி சீனா உதவிக்கரம் நீட்டுகிறது. மனித உழைப்பில் விளையும் எல்லாமும் எல்லாருக்கும் என்பதே கம்யூனிச சித்தாந்தம்.
கம்யூனிசத்தை ஏன் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?
கம்யூனிசத்தை ஏற்க மறுப்பது மக்கள் அல்ல; மக்களை ஏமாற்றி சுரண்டிக் கொண்டிருக்கும் அரசு களின் பொய்களும் கட்டுக்கதைகளும்தான்.
கொரோனா வைரஸ் உலக மக்களை இன்று தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்திய மாநில மான கேரளா தொடங்கி கியூபா, சீனா, வியட்நாம் வரை எங்கு திரும்பினாலும் இன்று கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை எந்த பேதமும் பார்க்காமல் காப்பாற்றிக் கொண்டிருப்பது ஒரே சித்தாந்தம்தான். கம்யூனிசம்!
சீனா நாட்டிலிருந்து இத்தாலிக்கு அனுப்பப்பட்ட மருத்துவ உதவி மூட்டைகளில் இப்படி ஒரு வாசகம் ஒட்டப்பட்டிருந்தது.
நாம்
ஒரே கடலின் அலைகள்
ஒரே மரத்தின் இலைகள்
ஒரே தோட்டத்தின் மலர்கள்!
எத்தனை சத்தியமான வார்த்தைகள்!
உலகை ஒரே கடலாக, ஒரே மரமாக, ஒரே தோட்டமாக கொண்டால், நாம் அனைவருமே ஒரு வருக்கொருவர் உறவு.
எவராலும் எவருமில்லை, எவரின்றியும் எவரு மில்லை!
இன்றைய உலகம் மக்களின் விருப்பத்துக்கேற்ப இடதை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது.
நன்றி : கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி
(அட்ச ரேகை நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒளிச் சித்திரத்தின் தொகுப்பு)