tamilnadu

img

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக இருந்து வந்த இங்கிலாந்து, நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. 

‘ஐரோப்பிய ஒன்றியத்தில்' இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, ஸ்வீடன், ஸ்பெயின் உட்பட 28 நாடுகள் இடம்பெற்றிருந்தன. இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதாக, கடந்த 2016-ஆம் இங்கிலாந்து அறிவித்தது. இதை அடுத்து, இங்கிலாந்து அரசு இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்களும் மாறினர். இதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் பிரதமராக, பதவியேற்ற பிறகு பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை மற்றும் மேலவையில் நிறைவேற்றப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக வரும் 31-ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், பிரெக்சிட்டுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது ஒப்புதலை அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதற்கு முன்பாக, பெல்ஜியம் தலைநகர் புரசலில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டிடத்தில் இருந்து, இங்கிலாந்தின் கொடி அகற்றப்பட்டது. இந்நிலையில், சரியாக நள்ளிரவு 11 மணிக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து முறைப்படி வெளியேறியது.