tamilnadu

img

ஆஸ்திரேலியா காட்டுத்தீயில் 50 கோடி விலங்குகள் பலி

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 50 கோடி விலங்குகள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு100க்கும் அதிகமான பகுதியில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 1300 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இதுவரை 20 பேர் பலியாகி உள்ள நிலையில் 10க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். 50 கோடி மிருகங்கள் வரை உயிரிழந்துள்ளன. மேலும் எத்தனை மரங்கள் எரிந்துள்ளன என்ற முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 
காட்டுத் தீ காரணமாக விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் 3 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 ஆயிரம் பேர் சிக்கியதாக கடற் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதில் சுமார் 1,000-த்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.  
இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இந்தியாவில் மேற்கொள்ள விருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 

;