tamilnadu

img

 ஸ்னாப்டீல் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு

இணையத்தின் வாயிலாக  போலியான பொருட்களை விற்பனை செய்த ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஸ்நாப்டீல் நிறுவனத்தின் உரிமையாளர்களான  குனால் பாஹ், ரோஹித் பன்சால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியைச் சேர்ந்த இந்தர் மோகன் சிங் ஹனி ஸ்நாப் டீல் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து உட்லாண்ட்ஸ் பெல்ட் மற்றும் வாலட் ஆகியவற்றை கடந்த 17ம் தேதி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் டெலிவரி செய்யப்பட்ட அந்த பொருட்கள் உட்லேண்ட்ஸ் நிறுவனத்தின் உண்மையான பொருட்கள் இல்லை அது போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து இந்தர் சிங் ஹனி  கும்மன்புரோ காவல் நிலையத்தில் இந்தர் மோகன் சிங்  போலியான பொருட்களை விற்பனை செய்ததாக ஸ்நாப்டீல் நிறுவனத்தின் மீது புகார் அளித்தார். 
இதையடுத்து காவல் துறையினர் ஸ்நாப்டீல் உரிமையாளர்களும், தலைமை நிர்வாக அதிகாரிகளான குனால் பாஹ், ரோஹித் பன்சால் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து சம்மன் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.