tamilnadu

img

அரியலூர் அருகே பெரியார் சிலை அவமதிப்பு

அரியலூர் மாவட்டம் தேளூரில் பெரியார் சிலையை சமூக விரோதிகள் அவமதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தேளூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் தார் ஊற்றி சென்றுள்ளனர்.
இதைத்தொடரந்து  பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிலையை நேரில் பார்வையிட்ட காவல் துறையினர் அவமதித்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகினறனர்.