திங்கள், செப்டம்பர் 27, 2021

tamilnadu

img

‘நீட்’-க்கு தொடரும் பலி... அரியலூர் அருகே மாணவி தூக்குப்போட்டு தற்கொலை....

அரியலூர்:
மருத்துவப்படிப்பில் சேர்வ தற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு அச்ச மடைந்து தமிழகத்தில் மாணவ,மாணவிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சோகச்சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வரு கின்றன. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போதைய தமிழக திமுக அரசும் அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மோடி அரசு தேர்வை ரத்துசெய்யாமல் பிடிவாதத்துடன் செயல்படு கிறது.

இந்நிலையில் அரியலூர் அருகே நீட் தேர்வு கடினமாக இருந்ததால், மாணவிஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது மேலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அருகே துளாரங்குறிச்சி கிராம த்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் கருணாநிதி. இவரது  இரண்டாவது மகள் கனிமொழி(17). நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று டாக்டருக்கு படிப்பேன் என்று பெற்றோரி டம் அடிக்கடிகூறி வந்தார். ஞாயிறன்று நடைபெற்ற  நீட் தேர்வை கனிமொழி தஞ்சையில் அமைக்கப்பட்டிருந்த மையத்துக்குச் சென்று எழுதினார். பின்னர் பேருந்தில் ஊருக்கு வந்துகொண்டிருந்தபோது,  தேர்வில் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது. இதனால் நிறைய கேள்விகளுக்கு என்னால் பதில் எழுத முடியவில்லை என்று தந்தையிடம் சோகமாக கூறியபடி வந்துள்ளார்.கனிமொழிக்கு  ஆறுதல் சொல்லி  தந்தை வீட்டிற்குஅழைத்து வந்தார். 

இந்நிலையில் திங்களன்று வீட்டில் தனியாக இருந்த கனிமொழி மின் விசிறியில்தூக்குபோட்டு  தற்கொலை செய்துகொண்டார்.  இதனைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.  கனிமொழியின் உடல் சொந்த ஊரான ஜெயங்கொண்டம் அருகே  சாத்தம்பாடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விக்கிரமங்கலம் காவல்துறையினர் செவ்வாயன்று சாத்தம்பாடி க்குச் சென்று, உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

;